142நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பாசமும் பந்தம் அற்ற பணிகளில் பக்திநண்ணும்
பாரில் மனிதரெல்லாம் யாரும் சமமென் றெண்ணும்,       (கண்)2

கேட்ட வுடன்மனத்தின் வாட்டம் அகன்றுவிடும்
கீழ்மைக் குணங்களெல்லாம் ஓட்டம் பிடித்துக்கெடும்
ஆட்டம் அலைச்சல்தந்த ஆசைகள் ஓய்ந்துவிடும்
ஆண்டவன் சந்நிதியின் ஆனந்த சாந்திதொடும்.       (கண்) 3

84.வள்ளல் காந்தி மகான்

பல்லவி

வள்ளுவன் குறள்களை வாழ்க்கையில் நடத்திய
வள்ளல் காந்தி மகான்.       (வள்ளு)

அநுபல்லவி

தெள்ளிய அறிவெனும் திருக்குறள் அறங்களைச்
செய்தவர் யாரெனும் ஐயம் அகன்றுவிட       (வள்ளு)

சரணங்கள்

ஒன்றாய் நல்லது கொல்லா விரதமும்
உயர்வால் அடுத்தது பொய்யாச் சரதமும்
என்றார் அதன்படி இவர்போல் நடந்தவர்
எவரும் இலரெனப் புவனம் வியந்திட       (வள்ளு)1

இன்னா செய்தவர்க்கும் இனியவை புரிந்தவன்
இறப்பினும் பிறஉயிரை எடுப்பதை மறந்தவன்
பொன்னே கொடுப்பினும் புகழே கிடைப்பினும்
புண்ணியம் நீங்கின எண்ணமும் விடுபவன்       (வள்ளு)2

துறவறம் வியந்திட இல்லறம் தொடர்ந்தவன்
துன்பங்கள் இடையிலும் இன்பங்கள் அடைந்தவன்
பெறவரும் வெற்றிகளைப் பிழையற்ற நல்வழியில்
பெற்றவர் காந்தியைப்போல் மற்றவர் இல்லையென       (வள்ளு)3