சரணங்கள் நூலுரை கல்வியும் நுணங்கிய கேள்வியும் நோக் கிடும் நலங்களைச் சீக்கிரம் அடைந்திட மாலுறும் மதவெறி மமதைகள் தெளியும் மரணம் என்பதன் அச்சமும் ஒழியும் (காலை)1 ஒழுக்கமும் சீலமும் உயர்ந்திடும் தினமும் உத்தம நெறிகளை உகந்திடும் மனமும் வழக்கிலும் தீயவை வாயில் வராது. வைவது கேட்பினும் வருத்தம் தராது. (காலை)2 ஏழைகள் எனச்சொல்லி இழிவுகள் புரியார் ஏறிய செல்வரும் அழிவுகள் தரியார் வாழிய யாவரும் வாழ்ந்திட என்றே வையகம் முழுதையும் வாழ்த்துவர் நன்றே. (காலை)3 87. நினைக்க நினைக்க உளம் இனிக்கும் பல்லவி நினைக்க நினைக்க உள்ளம் இனிக்க இனிக்க இன்பம் நிறைந்திடுமே எங்கள் காந்தியை நாம் (நினை) அநுபல்லவி பனிக்கப் பனிக்கக் கண்கள் ஆனந்த பாஷ்யம் வர பரமன் தரிசனத்தைச் சிரமமின்றிப் பெறுவோம் (நினை) சரணங்கள் மூப்பெனும் காந்தியிடம் முருகன் இளமை கொஞ்சும் முன்வர யாவருக்கும் மின்னெனச் சக்தி விஞ்சும் தாய்ப்பெரும் அன்புசிவம் தாண்டவம் புரிந்திடும் தரித்திரம் காமனைப்போல் பார்வையில் எரிந்திடும். (நினை)1 கர்மபலன் கருதா கண்ணன் நினைவு வரும் காரிய முயற்சியில் மாருதி ஊக்கம் தரும் தர்மபலன்க ளெல்லாம் தானம் செய்து துயிர்விட்ட! தன்னிகர் அற்ற அந்த கர்ணன் பெருமை கிட்டும். (நினை)2 |