150நாமக்கல் கவிஞர் பாடல்கள்

சரணங்கள்

நினைவுறும் போதே நெஞ்சம் குளிரும்
நிறைந்தநம் அகந்தைகள் நீ்ங்கிடும் எளிதில்
சினமெனும் பகைமை இனமற மறையும்
சீலமும் ஒழுக்கமும் மேலுற நிறையும்       (மனித)1

வம்புகள் துன்புசெய் வாதுகள் மறப்போம்
வறியவர் நொந்தவர் வாழ்வுறப் புரப்போம்
அன்புகள் செய்திடும் ஆசைஉண் டாகும்
அழிவுகள் செய்திடும் இழிகுணம் போகும்.       (மனித)2

உலகினர் யாவரும் ஒருகுலம் என்னும்
உண்மையை அடிக்கடி உணர்ந்திடப் பண்ணும்
பலவித வெறிகளின் பயித்தியும் தெளியும்
பகவான் விளங்கிடும் காந்தியின் ஒளியால்.       (மனித)3

95. மறந்திடுவாயோ?

பல்லவி

மறந்திடுவாயோ மனமே காந்தியை
மறந்திடுவாயோ?

அநுபல்லவி

அறந்தரும் அண்ணலவன்
மறைந்தனன் கண்ணிலென       (மறந்)

சரணங்கள்

பெருந்தவத் தோர்என
அறிந்துள யாரினும்
அருந்திறல் நிறைந்தவன்
அற்புதம் புரிந்தவன்.       (மறந்)1

அவன்பெயர் மொழிந்திடில்
எமன்பயன் ஒழிந்திடும்
தவம் தரும் நலங்களைச்
சுயம்பெற பலம்வரும்       (மறந்)2