புலவர் சிவ. கன்னியப்பன் 163

அநுபல்லவி

உடைமையும் உரிமையும் கடமைகள் தருமென
உணர்ந்திடச் செய்தவர் காந்தியன்றோ?       (கடமை)

சரணங்கள்

கடமை உணர்ந்தவனே உடமைக் குரியவனாம்
கருணை சிறப்பதுவும் கடமை தெரிவதனால்
மடமை பெருகுவதும் கடமை மறப்பதனால்
மாநிலத் தவர்க்கிந்த ஞானம் பிறப்பதற்கே       (கடமை)1

சத்தியக் குறியே கடமையைக் காட்ட
சாத்விக நெறியே உரிமையைக் கூட்ட
நித்திய சேவையால் பொதுநலம் நாடி
நெடுநிலம் முழுவதும் உடைமைகொண் டாடி       (கடமை)2

கடமைகள் புரிவதில் கருணையை மறவான்
கருணையென் றறநெறி கடமையைத் துறவான்
உடைமைகள் இழப்பினும் உரிமையைப் பிரியான்
உரிமைகள் மறுப்பினும் உயிர்க்கொலை புரியான்.       (கடமை)3

113. கடவுளைக் காட்டும்

பல்லவி

கல்வியினால் வரும் நல்லறி வூட்டும்
காந்தியின் வாழ்வே கடவுளைக் காட்டும்.

அநுபல்லவி

செல்வமும் கீர்த்தியும் செருக்குகள் ஒழியும்
சீரியன் காந்தியின் சிந்தனை வழியே       (கல்வி)

சரணங்கள்

தன்பலம் அல்லது பிறர்வசம் தணியான்
தன்னுடல் சுசிகரம் பொன்னெனப் புணைவான்
என்னொரு விஷயமும் உணர்ந்திடும் இயல்பான்
எதையும் முற்றிலும் அறிந்தபின் முயல்வான்.       (கல்வி)1