அன்பெனும் அணிகலம் ஒளிவீசும் ஆதர வாகிய மொழிபேசும் புன்சிரிப் பங்கே பொங்கிவரும் பூரிப் பங்கே தங்கிடுமே. 3 அறிவெனும் அணிகலம் அழகினோடும் அச்சமற் றெங்கணும் பழகிவிடும் பறிமுதல் செய்திட முடியாது பகைவர் என்பதும் கிடையாது. 4 கல்வியும் கேள்வியும் பொன்னாகும் கருணையின் மெருகே மின்னாகும் நல்லின நட்புகள் நவமணிகள் நகைமுக அணிகலம் தவமெனலாம். 5 பூண்டவர் தமக்கொரு தென்புதரும் புறத்துள எவர்க்கும் இன்புதரும் ஆண்டவன் நினைவொடு பணிபுரியும் அன்புடை அறிவே அணிகலமாம். 6 152. அன்பு அன்பு என்ற ஒன்றைநாம் அறிந்து கொள்ளக் கூடுமேல் துன்பம் என்ற யாவையும் தூர மாக ஓடுமே வம்பு வாது வார்த்தைகள் வாய டங்கிப் போகுமே. இன்ப மாக நாமெலாம் இங்கிருந்து வாழலாம். 1 ஜாதி பேதச் சண்டையும் சமய பேதக் கொடுமையும் மோதி மோதிமக்கள் தம்மை மூடராக்கும் மடமையும் |