212நாமக்கல் கவிஞர் பாடல்கள்

ஆன்றோர் வகுத்த அறநெறிப் பொருளாம்
அன்பின் ஒழுக்கமே இல்லறம் ஆவதாம்
அன்பிற் பெருக்கிய அருள்சேர் வாழ்க்கையே
துறவறம் என்பதன் துலக்கம் என்பது.
அன்பைப் போன்ற அரும்பெரும் செல்வம்.20

மனிதன் பெறுவது மற்றெதும் இல்லை
அறிந்தவர்க் கெல்லாம் அன்பே தெய்வம்
அன்பை உணர்வதே ஆனந்தம் எனக்கு.

155. வெற்றி எது?

வெட்டி வெட்டிக் கொல்லுவார்
       வீரம்என்று சொல்லுவார்
சுட்டுச் சுட்டுத் தள்ளுவார்
       சூரம் என்று துள்ளுவார்.       1

திட்டித் திட்டி ஏசுவார்
       தீரம் என்று பேசுவார்
கட்டு வார்த்தைத் தீரும் ஓர்
       காலம் வந்து சேருமோ!       2

வீரம் மூட்டி விட்டவர்
       வீட்டில் நின்று விட்டவர்.
தீரம் சொல்லித் தந்தவர்
       தெருவில் பேச வந்தவர்.       3

சூரம் கூறிச் சென்றவர்
       சொன்ன தோடு நின்றவர்
நேரிற்போரில் சிக்கினோர்
       நிரப ராதி மக்களே.       4

கண்ணைக் காலைப் போக்குவார்
       கருணை பேசித் தூக்குவார்
புண்ணை ஆறப் பண்ணுவார்
       புண்ணி யத்தை எண்ணுவார்.       5