298நாமக்கல் கவிஞர் பாடல்கள்

நால்வர் உரைத்த தேவாரத்தில் இல்லை
       நந்தன் குலத்துக்கு நிந்தைசொலல்;
பால்வரும் ஆழ்வார் பரசுரத்து இல்லை
       பாணர் வளர்ந்ததைக் கோணலெனல்.       4

சங்கரர் காசியில் அங்குஎன்ன சொன்னார்?
       சண்டாள பக்தனும் தங்குரு வென்றார்;
எங்கள்ரா மானுஜர் நம்பலம் என்றே
       யாரையும் கொண்டுடன் கோயிலுட் சென்றார்.       5

காட்டொருவேடனைத் தம்பியென்று எய்திக்
       கழுகினைத் தந்தையே னக்கடன் செய்து
சேட்டைக் குரங்கையும் தன்னுடன் சேர்த்துச்
       சீதாபி ராமனும் செய்ததைப் பார்த்தோம்.       6

கண்ணப்பன்எச்சிலை முக்கண்ணன் உண்டார்;
       கண்ணபி ரான்கடை நீரையுங் கொண்டார்;
எண்ணிய பக்தருக்கு எளியது தெய்வம்
       என்பது வேநல்ல இந்துவின் தர்மம்.       7

குறிப்புரை:-முக்கண்ணன் - மூன்று கண்களை உடைய சிவபெருமான்;
பக்தருக்கு -அன்பர்க்கு, பாடல் 4இல் தேவாரம்மூவரால்
எழுதப்பட்டது. எதுகை நோக்கி நால்வர் எனக்குறிக்கப்பட்டுள்ளது.)

187. ஓட்டடா

ஓட்டடா!ஓட்டடா!
       நாட்டைவிட்டே ஓட்டடா
தீட்டடா மனிதருக்குள்
       தீண்டல்என்ற தீமையே.       1

தொத்து நோய்கள் மெத்தவும்
       தொடர்ந்து விட்ட பேரையும்
       தொட்டுக் கிட்டிச் சொஸ்தமாக்கல்
              தர்மம் என்று சொல்லுவார்.