பாழுங் கள்ளால் பட்டதை நினைந்தால் பதைக்குது நெஞ்சம் கொதிக்குதடா! வாழும் நாடுஇனி; ஏழை கள்இல்லை; வானவர் வணங்கிட வாழ்ந்திடுவோம்! (விட்)12 189. எது வேண்டும்? எது உனக்கு வேண்டு மென்று எண்ணிப் பார்த்துச் சொல்லடா! மதிமி குந்த மனித ஜன்ம மகிமை காத்து நில்லடா! 1
ஞானமுள்ள நாடுஇது என்று பேர்நி லைத்தல் வேண்டுமா? சேனை கொண்டு சென்றுகொன்று சீர்கு லைத்தல் வேண்டுமா? 2 தந்தி ரத்தை வெல்லும்தூய்மை தாங்கி நிற்க வேண்டுமா? எந்திரத்தின் அடிமையாகி ஏங்கி நிற்க வேண்டுமா? 3 அறிவு கொண்டு மக்களுக்கே அன்பு செய்தல் வேண்டுமா? செறிவு கொண்ட சக்திபெற்றுச் சேதம் செய்தல் வேண்டுமா? 4
வெள்ளை யாகத் தீமையை எதிர்த்து வெல்ல வேண்டுமா? கள்ளமாய் மறைந்து செய்யும் காரி யங்கள் வேண்டுமா? 5 அன்பு சொல்லித் தீமையை அடக்கி யாள வேண்டுமா? வன்பு பேசித் தீமையை வளர்த்து வைக்க வேண்டுமா? 6 |