304நாமக்கல் கவிஞர் பாடல்கள்

குடிசை வாழும் எளியவரும்
       குறைகள் தீர வழிஇது
கடிசி லாத கைத்தொழில்
       கவலை நீக்கி வைத்திடும்.       (கூட்)3

பட்டிக் காடும் சீர்பெறும்
       பண்ட மாற்றல் நேர்பெறும்
குட்டிப் பண்ணைக் காரரும்
       கூட்டுறவால் பேர்பெறும்.       (கூட்)4

கைத் தறிக்கு நூல்வரும்
       கழனி ஏற்றச் சால்பெறும்
வைத்தி ருக்கும் விளைபொருள்
       வாங்க நல்ல விலைவரும்.       (கூட்)5

தொழில் நடத்த வசதிகள்
       துணை இலாத அசதியால்
பழுது பட்ட மாந்தரை
       பாது காக்க வாய்ந்ததாம்.       (கூட்)6

191. கூட்டுறவு இல்லாத நாடு

கூட்டுற வில்லா ஒருநாடு
       குறைவற வாழ்வது வெகுபாடு;
மேட்டிமை பேசும் நாடெல்லாம்
       மேன்மை பெற்றது கூட்டுறவால்.       1

கல்வி சிறந்திடும் கூட்டுறவால்
       கலைகள் நிறைந்திடும் கூட்டுறவால்
செல்வம் வலுத்திடும் கூட்டுறவால்
       சேமம் நிலைத்திடும் கூட்டுறவால்.       2

சோம்பலை ஒழித்திடும் கூட்டுறவு
       சுறுசுறுப் பளித்திடும் கூட்டுறவு