197. சுதந்தரம் யாது? அச்சம் விட்டது சுதந்தரம் அன்பு விடாதது சுதந்தரம்; இச்சைப் படிசெயல் சுதந்தரம்; இடர்செய் யாதது சுதந்தரம்; பிச்சை கொள்ள விரும்பாது பிறருக் கீய வருந்தாது கொச்சை மொழிகளைச் சொல்லாது கோணல் வழிகளில் செல்லாது. 1 மடமை விட்டது சுதந்தரம் மானம் விடாதது சுதந்தரம்; கடமை உற்றது சுதந்தரம்; கபடம் அற்றது சுதந்தரம் கொடுமை கண்டு பொறுக்காது கொடியவர் தமையும் வெறுக்காது அடிமை செய்து சுகிக்காது யாரையும் அடிமை வகிக்காது. 2 கொல்லக் கூசும் சுதந்தரம் கொள்கைக்கு உயிர்தரும் சுதந்தரம் எல்லை விட்டு நடக்காது எதிரியை ஒண்டி மடக்காது வெல்லற் கேனும் பொய்யாது வேற்றுமைக் காரரை வையாது பல்லைக் கெஞ்சிப் பிழைக்காது பட்டதன் தோல்வி ஒளிக்காது. 3 தன்சோ றுண்பது சுதந்தரம் தன்துணி யணிவது சுதந்தரம் என்னே வறுமை வந்தாலும் எத்தனை வறுமை வந்தாலும் |