314நாமக்கல் கவிஞர் பாடல்கள்

தன்னேர் செம்மை பிரியாது
       தன்குறை சொல்லித் திரியாது
பொன்சேர் போகம் மதிக்காது
       பொய்ப்புகழ் பாடித் துதிக்காது.       4

தாழ உரைப்பது சுதந்தரம்;
       தன்மதிப் புள்ளது சுதந்தரம்;
ஏழை செல்வன்என்(று) எண்ணாது
       எவருக் கும்குறை எண்ணாது
ஊழிய னாகப் பணிசெய்யும்
       உலகுக்கு எல்லாம் அணிசெய்யும்
வாழிய மக்கள் எல்லோரும்
       வாழிய வென்றே அதுகோரும்.       5

குறிப்புரை;- கடமை - கடப்பாடு, ‘என்கடன் பணிசெய்து
கிடப்பதே‘ என்பது அப்பர் வாக்கு.

198. கிளியும் வழியும்

ஆதிசு தந்தரத்தைக் கிளியே அடைய வழிதேடு;
நீரதன் திருவடியைக் கிளியே நாடி செயம்பாடு.       1

இந்தப் பெருநிலத்தில் கிளியே இச்சைப் படிப்பறக்க
சொந்தம் உனக்கிலையோ கிளியே செல்லடி வாய்திறந்து.       2

காட்டினி லேபிறந்தாய் கிளியே காற்றென வேபறந்தாய்
கூட்டினி லேகிடக்க கிளியே கூசலை யோஉனக்கு.       3

தங்க மணிக்கூண்டில் கிளியே தங்கி இருந்தாலும்
அங்குச் சுதந்தரத்தின் கிளியே ஆனந்தம் ஏதுனக்கு?       4

சொந்தம் எலாம்மறந்து கிளியே சுற்றமெல் லாம்துறந்தே
இந்தப் படியிருக்கக் கிளியே இச்சைகொண் டாயோநீ!       5

பச்சை மரக்கிளைமேல் கிளியே பாடுதல் நீமறந்தாய்
இச்சை உயிர்மேலே கிளியே இன்னும் எதற்காக?       6