புலவர் சிவ. கன்னியப்பன் 321

வயிரமதைத் தங்கத்திலே வைத்திழைத்தாற் போல
       வடிவழகா உன்றனுடன் சுந்தரியைக் கண்டே
துயரம்எல்லாம் விட்டுவிட்டோம் துணிமணியும் சோறும்
       துரைமகனே! எங்களுக்குத் துட்டுக்கூடத் தாரும்.       19

குள்ளநரிக் கொம்பிதுதான் கூடக்கொண்டு போனால்
       கூட்டமாகப் பகைவரினும் ஓட்டமாகும் தானே;
கள்ளமில்லை இதனுக்கொன்றும் காசுபணம் வேண்டாம்
       கனவானே தந்திடுவோம் கைக்கொள்வீர் ஆண்டே!       20

202. அன்னையின் மகிழ்ச்சி

பெற்றிட விரும்பும் பேறுகள் யாவினும்
மக்களைப் பெறுவதே மாபெரும் பேறென
உலகம் மகிழ்வது கண்கண்ட உண்மை.
குறைகளில் எல்லாம் மிகப்பெரும் குறையென,
குழந்தை இல்லாததைக் குறிப்பதும் வழக்கம்.       5

உணவுப் பொருள்கள் உற்பத்தி குறைந்து,
பற்பல நாட்டிலும் பஞ்சம் மிகுந்திட
ஜனத்தொகை மிகுவது சங்கடம் தருமெனக்
குழந்தைப் பெறுவதைக் குறைத்திட வேண்டிக்
கருப்பத் தடைகளைக் கருதும்இந் நாளிலும்       10

குழந்தை இல்லாமல் குறைபடுவோர் பலர்.
கூனோ, முடமோ, குருடோ, செவிடோ,
ஆணோ, பெண்ணோ, அழகோ, அசிங்கமோ
தான்பெற்ற மகவோ தனிச்சிறப் புளதாய்
உணரச் செய்வதே உடம்பின் இயல்பு.       15

குணமிலாக் குரூபக் குழந்தை பெறினும்
அப்படி இன்பம் அடைவர் என்றால்
அறிவுடன் அழகும் அமைந்த மக்களைப்
பெற்றவர் அடையும் பெருமித மகிழ்வை
எழுதவும் முடியுமோ? ஏடுதான் அடங்குமோ?       20

11 நா.க.பா.பூ,வெ, எ, 489