பெற்றோர் இருவருள் பெற்றவள் ஆகிய அன்னையின் மகிழ்ச்சி அளவுக்கு அடங்குமோ? 203. அவனும் அவளும் விரும்பிய நாடு மன்னவன் என்ற மனிதனில்லை - அங்கே மந்திரி தந்திரி யாருமில்லை. சின்னவர் என்றும் எவருமில்லை - பட்டம் தேடி அலைந்திடும் மக்களில்லை. 1 ஊருக்குப் பத்துப்பேர் நல்லவர்கள் - பொது யோசனை செய்திட வல்லவர்கள் ஆருக்கும் எதிலும் ஓரங்கள் செய்யாமல் அப்பப்போ தீர்ப்புகள் செப்பிடுவர். 2 நல்லவர் கெட்டவர் என்பதெல்லாம் - அங்கே ராஜாங்கம் பட்டம்ப தவியல்ல சொல்லில் நடத்தையில் சூரத்தில் தீரத்தில் சுத்தரென் றுபலர் நத்துவதே. 3 கச்சேரி என்றுஒரு கட்டிடமும் - அதைக் கண்டு நடுங்குதல் அங்கிலையே அச்சம்இல் லாமலே யாரும் பொறுப்புடன் அங்கங்கே நீதிந டத்திடுவார். 4 வீதிக்கு வீதியோர் நீதிஸ்தலம் - பத்து வீட்டுக்கு அங்கொரு பள்ளிக் கூடம். நீதிக்கே ஓடி அலைந்து செலவிட்டு நிலைகெட்டுப் போகிற நிந்தையில்லை. 5 பள்ளிப் படிப்புக்குச் சம்பளம் - இன்னும் பரீட்சைக்குக் கட்டப் பணமெனவும் பிள்ளைகள் பந்தாடப் பின்னும் பணம்என்று பிச்சிப் பிடுங்குதல் அங்கில்லையே. 6 |