புலவர் சிவ. கன்னியப்பன் 365

சூதுகள் அரசியல் நீதிகள் என்றிடும்
       சுத்தப் பொய்யுரையை
வீதியில் சந்தியில் விழிக்க விட்டுஒரு
       புரட்சி செய்திடுவோம்.       6

கொன்று குவிப்பதைவென்றி எனச்சொலும்
       கொச்சை எண்ணமெலாம்
சென்று மறைந்தன என்று சொலும்ஒரு
       புரட்சி பண்ணிடுவோம்.       7

சண்டையும் கொலைகளும் பண்டைய நாள்முதல்
       கண்டு களித்ததடா!
வண்டர்கள் வழிகளைக் கொண்ட புரட்சியில்
       நன்மை பலித்திடுமோ?       8

தீமையி னால்ஏதும் நன்மைகள் வரினும்
       தேய்ந்தவை மாய்ந்துவிடும்.
வாய்மையின் அன்பால் வருகிற நலமே
       புரட்சி வாய்ந்ததுவாம்.       9

உத்தமன் காந்தியின் உபதே சம்தான்
       புரட்சி போதனையாம்;
சத்திய நெறிதரும் சாத்விக முறையே
       புரட்சி சாதனையாம்.       10

குறிப்புரை:- சூது - வஞ்சனை; வேதனை - துன்பம்;
வண்டலர்கள் - மங்கல பாடகர்கள்.

226. மன்னவன் நானே

மன்னவன் நானே மந்திரி என்சொல்
       மற்றவர் யாருக்குச் சுற்றமிது?
என்னுடை நாடு என்னுடை வீடு
       யாரிதில் என்னை மிரட்டுவது