380நாமக்கல் கவிஞர் பாடல்கள்

என்ன புதுமையிது பாரும் - கொடி
       ஏதிது போலென்று கூறும்.
அன்னைக் கொடியிதனைப் பாடு - அதன்
       அடியில் நின்றுபுகழ் கூடி.       (கொடி)9

ஏழை எளியவர்கள் யார்க்கும் - பயம்
       இல்லை யென்னஅறங் காக்கும்
வாழி நமதுகொடி வாழி - புது
       வாழ்வு தந்துஇனிது ஊழி.       (கொடி)10

குறிப்புரை:-பூதலத்தில் - உலகில்; மூன்று நிறம் - பச்சை,
வெள்ளை, காவி; மையம் -நடுவு.

236. ‘ஜேய் ஹிந்த்‘

‘ஜேய் ஹிந்த்‘ என்கிற
              ஜீவநன் னாதம்
       தேசத்தில் ஒற்றுமை
              சேர்க்கின்ற கீதம்
பேய்கொண்டது என்ன
              நமைப்பிடித்(து) ஆட்டும்
       பேத உணர்ச்சியை
              நாட்டை விட்டு ஓட்டும்.       (ஜேய்)1

அச்சத்தைப் போக்கி நல்
              ஆண்மையைப் போற்றி
       அடிமைக் குணங்களை
              அடியோடு மாற்றி
துச்சம் உயிர்எனத்
              தொண்டுகள் செய்யத்
       தூண்டிடும் சக்திகள்
              ஆண்டிடும் துய்ய       (ஜேய்)2