தமிழ னென்ற பெருமை யோடு தலைநி மிர்ந்து நில்லடா! தரணி யெங்கும் இணையி லாஉன் சரிதை கொண்டு செல்லடா! அமிழ்த மென்ற தமிழி னோசை அண்ட முட்ட உலகெலாம் அகில தேச மக்க ளுங்கண் டாசை கொள்ளச் செய்துமேல் கமழ்ம ணத்தின் தமிழில் மற்ற நாட்டி லுள்ள கலையெலாம் கட்டி வந்து தமிழர் வீட்டில் கதவி டித்துக் கொட்டியே நமது சொந்தம் இந்த நாடு நானி லத்தில் மீளவும் நல்ல வாழ்வு கொள்ளச் சேவை செய்து வாழ்க நீண்டநாள்! 6 குறிப்புரை:- நானிலம் - பூமி; (6) சேவை - தொண்டு; (6) ஏழை - வறுமை; (4) துச்சம் -இழிவு (3) தரணி - உலகம் (6) பண்டு - முற்காலம் (2) மண்டும் - நிரம்பும் (4) 21. தமிழன் குரல் ‘தமிழன் குரல்‘ எனும் தனிஓசை தருமம் உணர்ந்திட நனிபேசும்; அமிழ்தம் போன்றுள அழிவில்லா அறிவே அதுதரும் மொழியெல்லாம். 1 கொல்லா விரதம் குறியாகக் கொள்கை பொய்யா நெறியாக எல்லா மனிதரும் இன்புறவே என்றும் இசைத்திடும் அன்பறமே. 2 அருள்நெறி அறிவைத் தரலாகும்; அதுவே தமிழன் குரலாகும்; |