255. காந்தி வாழ்க காந்திநாமம் வாழ்க வென்று கைகு வித்துக்கும்பிடு சாந்த மாக உலகம் எங்கும் சண்டை இன்றி இன்புறும்.1 அருளி(து)என்ற பொருள் அறிந்த அந்த ணர்க்குள் அந்தணன் தெருள டைந்த மனித வர்க்கம் தீமை தீர வந்தவன்.2 கொலைமறுத்துப் பொய்த விர்த்துக் கொடுமை நீங்கப்பண்ணினான் தலைசி றந்த காந்தி சேவை விலைம திக்க ஒண்ணுமோ?3 யுத்தம்என்றே உலக முற்றும் மெத்த நொந்த இந்தநாள் சத்தம் இன்றி அன்பு செய்யும் சாந்த மார்க்கம்தந்துளான். 4 எந்தநாடும் விடுத லைக்கா எண்ணில் துன்பம்எய்திட இந்த நாட்டின் சொந்த ஆட்சி எளிதில் கூடச் செய்தவன்.5
தீமை செய்து நன்மை சேரத் தேவ ராலும் ஒல்லுமோ? வாய்மை தன்னை வற்பு றுத்தி வாழ்ந்து காட்டும்வல்லவன். 6 எண்ணிறந்தஞான வான்கள் இந்தப் பூமி கண்டது மண்ணில் எங்கள் காந்தி போல மற்றஒ ருத்தர் உண்டுகொல்!7 |