புலவர் சிவ. கன்னியப்பன் 415

மாந்தர் எங்கும்கலகம் இன்றி
மருவி வாழக்கோரினால்
காந்தி மார்க்கம் ஒன்றை அன்றிக்
கதிந மக்கு வேறிலை.8

இந்தியாவின்பெருமை முற்றும்
இந்தக் காந்திமார்க்கமே
அந்த ஞான உரிமை தன்னை
அழிவி லாது காக்கவே!9

கட்டி நின்றுகாந்தி செய்யும்
கருணை வாழ்வை ஒட்டியே
கிட்டி விட்ட சொந்த ஆட்சி
கெட்டுப் போக விட்டிடோம்.10

256.சஞ்சலத்தை நீக்குவாய்

அமரனாகி எம்மைக் காக்கும்
அண்ணல்காந்தி ஐயனே!
அஞ்ச லித்து நிற்கும்எங்கள்
சஞ்சலத்தை நீக்குவாய்!
சமனி லாத சாந்த ஞான
சத்தியத்தின் நிலையமே!
சரிச மான மாக மற்ற
உயிரைஎண்ணும் தலைவனே!
நமது நாடு உலகி னுக்கு
ஞானசேவை பண்ணவே
நானி லத்தில் இவ்விடத்தை
நாடிவந்த விண்ணவா!
அமைதி மிக்க அறிவி னோடும்
அன்புமிக்க ஆற்றலும்
அருள வேணும் அப்ப னேஉன்
அடிபணிந்து போற்றினோம்.1