42நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பொருள்பெற யாரையும் புகழாது;
       போற்றா தாரையும் இகழாது.       3

அன்பும் அறமும் ஊக்கிவிடும்;
       அச்சம் என்பதைப் போக்கிவிடும்;
இன்பம் பொழிகிற வானொலியாம்;
       எங்கள் தமிழெனும் தேன்மொழியே.       4

குற்றம் கடிந்திடக் கூடாது;
       கொச்சை மொழிகளில் ஏசாது;
முற்றும் பரிவுடன் மொழிகூட்டி
       முன்னோர் நன்னெறி வழிகாட்டும்.       5

தமிழின் பெருமையை மறந்துவிடின்
       தாரணி மதிப்பில் குறைந்திடுவோம்;
தமிழன் குரலொடு ஆர்த்திடுவோம்;
       தமிழக உரிமையைக் காத்திடுவோம்.       6

22. தமிழகம் வாழ்க

தமிழா! உனக்கிது தருணம் வாய்த்தது
       தரணிக் கெல்லாம் வழிகாட்ட
அமுதாம் என்மொழி; அறமே என்வழி;
       அன்பே உயிர்நிலை என்று சொல்லும்       (தமிழா)1

சைவமும் வைணமும் சமணமும் பவுத்தமும்
       தழைத்தது செழித்தது தமிழ்நாட்டில்
வையகம் முழுவதும் வணங்கிடும் குணங்களை
       வாழ்ந்தவர் உன்னுடை முன்னோர்கள்       (தமிழா)2

எங்கோ பிறந்தவர் புத்தர் பெருமையை
       ஏத்திப் பணிந்தவர் தமிழ்நாட்டார்;
இங்கே அங்கே என்ற வுரைகளை
       என்றும் பிரிந்திலர் தமிழ்நாட்டார்.       (தமிழா)3