261.காந்தி சொல்லை ஏந்தி நிற்போம் அடிமைத்தனத்தை விட்டோம் - ஆனால் அன்பை மறந்து கெட்டோம் மடமைத் தனத்தை வென்றோம் - ஆனால் மமதை நிறைந்து நின்றோம் கொடுமை எதிர்த்து வந்தோம் - இன்று கொள்கை உதிர்ந்து நொந்தோம் உடைமை அடையப் பெற்றோம் - ஆனால் உண்மைப் பிடிகள் அற்றோம். 1 பதவியைஏசி வந்தோம் - இன்று பதவிக்கே ஆசை தந்தோம் உதவிகள் தேடிச் செய்தோம் - இந்நாள் உதவியை நாடி வைதோம் மதவெறி தீமை என்றோம் - நாமும் மாறிப் பொறாமை கொண்டோம் இதுவும் சுதந்தரந் தானோ? - இனி என்ன இதந் தருமோதான்? 2 ஒற்றுமைவேண்டும் என்றோம் - இந்நாள் உறவறத் தூண்டு கின்றோம் வெற்றுரை விட்டு உழைத்தோம் - இன்று வேற்றுமைப் பட்டு இளைத்தோம் பெற்றசு தந்திரத்தை - நாம் பேணி இதம் பெறத்தான் நற்றவன் காந்தி சொல்லே - எந்த நாளிலும் ஏந்தி நிற்போம். 3 குறி்ப்புரை:-மமதை - எனது என்கின்ற செருக்கு. 262.காந்தீயமே உலகைக் காக்கும் ஜயஜயகாந்தியின் திருப்புகழ் பாடு சகத்தினுக்(கு) அரும்பணி வேறிலை ஈடு |