வாதெல்லாம் விலக்கி, கலைவாண ரெல்லாம் வல்லநல்ல தமிழ்பாடி வாழ வேண்டும். 9 குறிப்புரை:- சிக்கு - தடை; வாதம் - சண்டை, சபதம்; அகத்தியம் - கட்டாயம், அவசியம். 33. திருக்குறள் பெருமை அமிழ்தமென்று மிகமகிழ்ந்தே அறிஞர்யாரும் போற்றிட அறிவறிந்த மொழிஇதென்றே அகிலமெங்கும் ஏற்றிடும் தமிழ்மொழிக்கிங் கழிவிலாத நன்மைசூட்டி வைத்ததும் தரணியெங்கும் இணையிலாத இல்லறத்தை தந்திடும். 1 அமைதிமிக்க ஜனசமுகம் தமிழரென்ற கீர்த்தியும் அடிமையற்ற குடிமைபெற்ற அரசுகண்ட நேர்த்தியும் இமையவர்க்கும் நெறிபுகட்டும் எங்கள் தெய்வ வள்ளுவன் இங்குரைத்த குறள்களென்ப ஈந்தநன்மை அல்லவோ! 2 காடுசென்று குகையடைந்து கண்கள்மூடி எண்ணியும் காவிகட்டி ஓடெடுத்துக் கஷ்டவாழ்க்கை பண்ணியும் தாடிவைத்து மொட்டைதட்டித் தவசியென்ற பேருடன் தரணிமெச்ச ஊர்கள்சுற்றித் தருமபோதம் கூறியும். 3 |