10 |
| | வேதநாயகம் பிள்ளை வரலாறு | | னும் அலுவலில் அமர்த்தினர். அவ்வேலையைத் திறம்பட இரண்டாண்டுகள் செய்துவந்தனர். பின் மொழிபெயர்ப்பாளராம் விழுமியநிலை எய்தினர். 1857-ஆம் ஆண்டில் தரங்கம்பாடியில் முறைமன்றத்தலைவர் (முன்சீப்) என்னும் நிறைபெறுநிலை எய்தினர். அவ்வேலையை நடுநிலை பிறழா நயத்துடன் உரைமுடிவு கண்டு ஊரும் உலகமும் ஒப்ப வழக்காளர் உளமும் நிறைய முறைசெய்து வருவாராயினர். அங்குநின்றும் சீகாழிக்கு மாற்றப்பெற்றனர். | | நல்லார் நட்பு | | அப்பொழுது இயற்றமிழ் வல்லராய்ச், செந்நாப்புலவராய், நூலாசிரியராய், உளங்கொள நுவலும் ஆசிரியராய்ப், பாவன்மையும் நாவன்மையும் ஒருங்கமைந்தவராய்க், காட்சிக்கெளிமையும் கடுஞ்சொலின்மையும், கைம்மாறுகருதாச் செம்மையும், தோலாநாவின் மேலாம் பண்பும் வாய்ந்தவராய்ச் செம்பொருட்டுணிவும், சிவநெறி மாண்பும் தம்பெரும் தவமாக் கொண்டொழுகும் சீலராய், மாணாக்கர்களுக்கு உண்டி யுறையுள் உடையும் நல்கிக் கற்பிக்கு நடையினராய்த் திகழ்ந்த மாபெரும்புலவர் "திருசிரபுரம் மகாவித்துவான் திரு. மீனாட்சிசுந்தரம்" பிள்ளையவர்கள் சீகாழிக்கு எழுந்தருளினர். இருவரும் பொருவரிய நண்பராயினர். | | நீதி நூல் வெளியிடல் | | வேதநாயகம்பிள்ளையவர்கள் மீனாட்சிசுந்தரம்பிள்ளை யவர்களுடன் 'உணர்ச்சியொத்த' நண்பினராயினமையின், பிள்ளையவர்களைக்கொண்டு சீகாழிக்கு ஒரு கோவை பாடுவித்தனர், அக்கோவை நூல் மிக்கார் கூடிய அவைக்கண் 1858-ஆம் ஆண்டில் அரங்கேற்றமும் செய்யப்பட்டது. | | |
|
|