பக்கம் எண் :

9

  வேதநாயகம் பிள்ளை வரலாறு
  பிணக்கின்றி, 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்னும் திருமுறைக் கிணங்கப் பொதுநோக்கு மிக்குடையவர். பழம்பிறப்பின் தொடர்ச்சியால் தம் பதினொன்றாம் அகவைக்குள் தமிழ்நூற்கள் பெரும்பான்மையும் கற்று வல்லாராயினர்.
  இஃது, "ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து"
  என்னும் பொதுமறை அருண்மொழியை விளங்கச் செய்கின்றது. பின் ஆங்கிலங் கற்க அளவிறந்த அவாக் கொண்டனர்.
     அஞ்ஞான்று ஆங்கிலம் எல்லா ஊர்களிலும் பள்ளிகளமைத்து பயிற்றுவிக்கவில்லை. ஆங்கிலம் கற்றார் தொகையும் மிகக் குறைவு. அப்படி யிருந்தும் வழக்குமன்ற மொழிபெயர்ப்பாளர் திரு. தியாகப்பிள்ளை என்பவர்களிடம் ஆங்கிலம் முறையாகக் கற்றுத் தேர்ந்தார். திரு. தியாகப்பிள்ளை யவர்கள் தமிழிலும் வல்லவராக இருந்தமையால், மற்றும் பல தமிழ் நூல்களும் கற்றுத் தேர்ந்தார்.
  அலுவல் 
       பிள்ளையவர்களின் நற்பண்பும், நுண்மாண் நுழைபுலமும்,, விடாமுயற்சியும், முறையறிந்து ஒழுகும் திறமையும், 'நகையீகை இன்சொல் இகழாமை' முதலிய சீலமும், பணிவும் இன்சொல்லும், வாய்மையும், தூய்மையும், உலகினருள்ளத்தைக் கொள்ளைகொண்டன. அவ்வாறே அரசினர் மனத்தையும் கவர்ந்தன. அதனால், அரசினர் திருச்சிராப்பள்ளி வழக்குமன்றம் ஒன்றில் 1848-ஆம் ஆண்டில் பதிவுப் பொறுப்பாளர் ( Record Keeper ) என்