| 19 |
| | | பெண்மதிமாலை | | | கற்றவளே துரை | சானி-கல்லா | | மற்றவளே சுத்த | மடை சாம்ப்ராணி-மதி | | | 36 | | | தாழ்வோரை நீசிரி | யாதே-மிக | | வாழ்வோரைக் கண்டுநீ | வயிறெரி யாதே-மதி | | | 37 | | | நாட்டிலெவரையும் வை | யாதே-உன்றன் | | பாட்டிசொன்னாலுநீ | பாவஞ் செய்யாதே-மதி | | | 38 | | | பூச்சியைப் பிடித்துக்கொல் | லாதே-உன்றன் | | ஆச்சி சொன்னாலுநீ | யபத்தஞ் சொல்லாதே-மதி | | | 39 | | | பிட்சையிடாம லுண் | ணாதே-ம்ருகம் | | பட்சிக்கு மேதுன்பம் | பண்ண வொண்ணாதே-மதி | | | 40 | | | இட்டமாய் நல்லோரைக் | கூடு-பொல்லாத் | | துட்டரைக் கண்டால்நீ | தூரத்திலோடு-மதி | | | 41 | | | ஊரார் பொருளைத் | தொடாதே-நாலு | | பேரறி யும்படி | பிச்சை யிடாதே-மதி | | | 42 | | | நித்தமும் நீரிலே | முழுகு-வீடு | | சுத்தமாகும்படி | தோகையே மெழுகு-மதி | | | 43 | | | புழுநிறை யூத்தைச் | சரீரம்-இதைக் | | கழுவாவிட்டால் நாறும் | காதவித்தாரம்-மதி | | | 44 | | | அழுக்கு வத்திரங்கள்கட் | டாதே-உடல் | | கொழுக்கவுண்ணும் தீனி | குடலிலொட்டாதே-மதி | | | 45 | | | சூதும் வாதும்படி | யாதே-நாளும் | | தீதுசெய் தால்தரித் | திரம் விடியாதே-மதி | | | 46 | | | கோட்சொல்லி குடிகெடுக் | காதே-தப்புச் | | சாட்சி சொல்லுங்குடி | தலையெடுக்காதே-மதி | | | 47 | | |
|
|