பக்கம் எண் :

21

  பெண்மதிமாலை
  மெய்சொல்ல மேன்மையுண் டாமே-தினம்
பொய்சொல்லும் வாய்க்குப் புசிப்பற்றுப்போமே-மதி
  60
  நகைதுணி யிரவல்வாங் காதே-வாங்கில்
சகலரு மேசுவர் தாழ்வு நீங்காதே-மதி
  61
  மங்களமாக நாள் போக்கு-கைக்குக்
கங்கணம் போடவே காய் கறியாக்கு-மதி
  62
  வீட்டுக் கணக்கெல்லா மெழுது-நல்ல
ஏட்டுக் கணக்கருக் கில்லையே பழுது-மதி
  63
  மட்டின்றிக் கடன்வாங்கல் தீது-ஐயோ
குட்டிச்சுவரில் முட்ட வெள்ளெழுத் தேது-மதி
  64
  கடன்களைத் தீர்க்கத்தப் பாதே-கண்ட
இடமெல்லா முன்குறை யெடுத்துச் செப்பாதே-மதி
  65
  வெள்ளமா யாசைப் படாதே-கையில்
உள்ளது போது முறுதி விடாதே-மதி
  66
  எல்லாங் கைகூடி வராதே-நமக்
கில்லாவழகைக்கண் ணாடி தராதே-மதி
  67
  எவராலு மேயிசை யாதே-செய்த
அவனசையாம லணுவசை யாதே-மதி
  68
  ஈனராலும் கா யாதே-சிறு
பூனைபோலிருந்து நீ புலிபோற் பாயாதே-மதி
  69
  கண்டெடுத்த பொருளை நீயே-சொந்த
பண்டக்கா ரரைத் தேடிப் பரிந்தளிப்பாயே-மதி
  70
  கள்வர்கைப் பொருளைவாங் காதே-வாங்கும்
உளவரில்லா விட்டாற் களவேது மாதே-மதி 
  71