பக்கம் எண் :

28

  ஞானம்
  கும்பியு டல்புகை யோட்டம் இதை
நம்பியி ருக்குமே நாய்நரிக் கூட்டம்-மதி
  134
  தங்கமும் வெள்ளியு மண்ணே-என்றும்
மங்காத மோட்சத்தின் வாழ்வைநீ யெண்ணே-மதி
  135
  தனமிருந் தாலிற வோமோ-தூங்கும்
கனவிற்கண் டவாழைக் காய்கறிக் காமோ-மதி
  136
  இலைபோல வயிறொரு சாணே-பொருள்
மலைமலை யாய்ச்சேர்த்து வைக்குதல் வீணே-மதி
  137
  நவமணி பலவகைக் கல்லே-இந்தப்
புவன சுகங்களெல் லாஞ்சிறு புல்லே-மதி
  138
  ஆஸ்தியுன் கூடவ ராதே-கட்டிக்
காத்திருந் தாலுமுன் கையிலி ராதே-மதி
  139
  உண்பது காற்படி சோறு-பூதம்
எண்பது போல்வேலி யேனிரு நூறு-மதி
  140
  இருக்குமி டமுழந் தானே-நாலு
தெருக்களி னும்பல வீடுக ளேனே-மதி
  141
  பிழைப்புக் குரியபிண்டந் துண்டம்-அன்றிப்
பழிப்புக் கிடமிலையோ பலபல பண்டம்-மதி
  142
  நகையில்லாக் காதுகே ளாதோ-பல
வகைப்பட்டி ல்லாவுடல் வளர்ந்துநில் லாதோ-மதி
  143
  குச்சுவீ டின்பங்காட் டாதோ-பெரு
மச்சுவீட்டி லேதுன்பம் வரமாட் டாதோ-மதி
  144
  பணங்கண்டால் நமனஞ்சு வானோ-நல்ல
குணமாகப் பணக்கார ருடன்கொஞ்சு வானோ-மதி
  145