| பெண்மதிமாலை |
| வீட்டுவே லைதெரி யாதவள் வேம்பு மினுக்கும் அவள்குலுக்கு மேவெறும் வீம்பு கூட்டுநற் குணமில்லாக் கொடியவள் பாம்பு குலத்தைக் கெடுக்கவந்த கோடாலிக் காம்பு |
| (நல்ல) 4 |
| நகைகள் தரித்துமஞ்சள் வாடைகள் பூசி நாடெங்குந் தெரியவே நகைத்துக்கை வீசி சொகுசுட னடப்பவ ளாயிரந் தாசி சும்மாவந் தாலுமவள் வேண்டாஞ் சீச்சீ |
| (நல்ல) 5 |
| தேவதா பத்தியில் லாதவள் கள்ளி திருட்டுக்கும் புரட்டுக்கு மவளொரு பள்ளி தாவில் புருடன்குடிக் கவள்பெருங் கொள்ளி சனியனை விலைக்குவாங் காமல்நீ தள்ளி |
| (நல்ல) 6 |
| உடைமைக ளுடன்பணங் காசின்மே லிச்சை உள்ளவள் சண்டைக்குக் கட்டுவாள் கச்சை இடைவி டாமலிவ ளாற்கெடும் லச்சை இவளைக்கொள் ளுவதிலும் எடுக்கலாம் பிச்சை |
| (நல்ல) 7 |
| சந்ததங் கணவன்மே லொழியாத பத்தி சாந்தம் பொறுமை தயைதானம் நற்புத்தி எந்த வேளையு முடலாத்தும சுத்தி இல்லா தவளவள் கழுத்துக்குக் கத்தி |
| (நல்ல) 8 |
| நல்லவ ளேழையா னாலுந் தொடாதே நானூறு போனாலும் நீபின்னி டாதே பொல்லா தவள்கையிற் காட்டிக்கொ டாதே புலியைக் கொண்டுவந்தென்னைத் தெருவில்விடாதே |
| (நல்ல) 9 |