பக்கம் எண் :

35

  பெண்மதிமாலை
  பாக்யவ தியவள் பக்கத்தி ருந்தாலும்
பாவமெல் லாம்பறந் தோடும்-அவள்
பால்வடி யுமுகம் பார்த்தாலும் போதும்சௌ
பாக்யம்வந் துவிளை யாடும்-திரு
வாக்கால வள்மழை பெய்யென்றாற் பெய்யுமே
வர்ணிக்க யாராலே கூடும்-கிட்டி
வந்தது மக்குத்துரந்தர யோகம்
வருத்தத்தை நீர்தள்ளிப் போடும்-இனிக்
கருத்தி லவளையே நாடும்-நல்ல
பொருத்தம்ஆ னந்தக்கூத் தாடும்
  (பஞ்ச) 2
  வெள்ளியுந் தங்கமும் அள்ளிக்கொ டுத்தாலும்
வேறொரு வர்முகம் பாராள்-நல்ல
மேன்மைத்து ரைகளா னாலும் வீட்டு
வேலைக்குப் பின்னிட்டுச் சோராள்-நிதந்
தள்ளிநீர் வைத்தடித் தாலுங்கை நோகுமே
சாமியென் றுதொழுஞ் சீராள்-பெற்ற
தாய்தகப் பனழைத் தாலும்உம் மைவிட்டுச்
சற்றும்பி ரிந்திட நேராள்-பழு
தற்றந வமணி நேராள் நாளுங்
குற்றமுள் ளோர்சபை சேராள்-செய்த
நற்றவத் தாலன்றி வாராள்
  (பஞ்ச) 3
  காரியம் பார்ப்பவள் கணக்குமெ ழுதுவள்
காய்கறி யாக்கவுங் கெட்டி-அவள்
கைபட்டால் வேம்புங்க ரும்பல்ல வோருசி
கண்டுநீர் மண்டுவீர் சட்டி-அவள்
ஊரிலே மாமியார் நாத்திமார் எல்லாம்
உவந்திடு கற்கண்டுக் கட்டி-தினம்
ஓயாவி ருந்துவந் தாலுஞ்ச லியாமல்