| தூதன் பெண் பார்த்துவந்து சொல்லுதல் |
| உண்ணச்சொல் வாள்அன்னங் கொட்டி-அந்த வண்ணக்கு யிலைநீர் கிட்டி-இரு கண்ணிற்கண் டாற்படுந் திட்டி-துரைப் பெண்ணைக் கொள்ள வென்ன அட்டி |
| (பஞ்ச) 4 |
| சிந்தாமல் மங்காமல் வீட்டுப்பொ ருள்களைச் சீவன்போற் காக்குநிர் வாகி-தினம் செலவுகு றைத்துவ ரும்படி யில்மிச்சம் சேர்த்துவைக் குமதி யூகி-தினம் கந்தமு றவே தன் வீட்டையுந் தன்னையுங் கனசுத்தஞ் செய்நாக ரீகி-காணும் கனவில் நனவிலெப் போதுந்தெய் வத்தை கணவனை த்யானிக்கும் ஸ்நேகி-நகை மனம்விரும் பாதவி வேகி-சாந்த குணமுடை யகன த்யாகி-நல்ல உணர்வுடை யவுப யோகி |
| (பஞ்ச) 5 |
| ஆபத்து வேளையி லறிவுசொல் மந்த்ரி அரும்பிணிக் கவளொர்சஞ் சீவி-துன்பம் அணுகும்போ தாறுதல் தரித்ரகா லத்தில் அருநிதி யாம்அந்தத் தேவி-உம்மைப் பாபத்தில் வீழாமற் போதிக்குஞ் சத்குரு பாடவும் வல்லமே தாவி-தெய்வ பத்திநற் புத்தியி ரக்கம்பொ றுமை பரவிய சற்குண வாவி-பர புருஷருக் கவள்பச்சை நாவி-அவள் பெருமைக்கோர் குறைசொல்வோன் பாவி |
| (பஞ்ச) 6 |
| சங்கீதம் பாடியும் இங்கிதம் பேசியுந் தாள்பிடித் துந்துயர் தீர்ப்பாள்-நாளும் தன்வேலைக் காரர்ப லரிருந் தாலுஞ |