37 |
| | பெண்மதிமாலை | | சகலமுந் தன்கண்ணாற் பார்ப்பாள்-வீட்டில் அங்குமிருப் பாள்பின் னிங்குமிருப் பாள்-உம் அண்டையிலுங் கட்டிக் காப்பாள்-உமக் கற்பவ ருத்தமில் லாமற்க வலைகள் அத்தனை யுந்தலை யேற்பாள்-திருச் சித்தமென் னவென்று கேட்பாள்-மொழி புத்தமு தைச்செவி வார்ப்பாள்-உம்மை உத்தம மார்க்கத்தில் சேர்ப்பாள் | | (பஞ்ச) 7 | | நீர்மகிழ்ந் தால்,அவள் தான்மகிழ் வாள்-துன்பம் நீர்கொள்ளில், அவட்கும்வி சாரம்-அன்னம் நீருண்ணில், அவள்பசி தீரும், இருவர்க்கும் நிச்சய மேகச ரீரம்-இந்த ஊரில்நீ ரில்லாத போதுறங் காள்அன்னம் உண்ணாள்; பண் ணாளலங் காரம்-நீர் ஊமைகு ருடரா னாலுஞ்செய் வாளுமக் குரிமையாய் ராசோப சாரம்-ஆனால் பரமாத ருடனீர் சஞ்சாரம் செய்யில் வருமவ ளுடையநிட் டூரம்-அதற் கொருநாளு மிலைபரி காரம் | | (பஞ்ச) 8 | | பாவம்நீர் செய்யச்சொன் னாலுஞ் செய்யாள்-வேறே பண்ணாளு மக்கப சாரம்-பெறும் பாலர்க்கு நல்வழி காட்டித்தி னமும் படிப்பிப்பாள் வேதாந்த சாரம்-வந்து தாவு மெளியவர்க் கில்லையென் னாமலே தாய்போற்செய் வாளுப காரம்-செல்வந் தாழினும் ஏழைக்குத் தானுண்ணு மன்னத்தைத் தந்து,மெ லியாள் சரீரம்-தம யந்தியு மேநமஸ் காரஞ்செய் யும் | | |
|
|