பக்கம் எண் :

39

  188 பெண்மதிமாலை
  வருத்தம்நீர் படக்கண் டால்மனந் துடிப்போம்-கீத  
வண்ணங்கள் பாடிக் கொண்டுகால் பிடிப்போம்-பாட

மாட்டோமோ
மீட்டோமோ
காட்டோமோ
ஊட்டோமோ

 வீணை
நயங்
சுகம்
நல்ல

(வித்தை) 1
 
வரவுசெல வின்கணக் கெழுதிவைப்போம்-பல
வகைவகை யுடுப்புக ளுமக்குத் தைப்போம்
பரவும் பலதொழில் நீர்பண்ண வொப்போம்-நல்ல
பக்ஷணங் கறிகளுஞ் செய்யத் தப்போம்-நாங்கள்

படியோமோ விடியோமோ முடியோமோ பிடியோமோ

இருள்
மருள்
அருள்
நல்ல

(வித்தை) 2
 
வாணியும் நீரும் ஒரு கோத்திரமா-அவள்
வரப்பிரசாதம் உமக்குமாத் திரமா
வீணி லவட்கெங்கண் மேல்க்ஷாத் திரமா-நாங்கள்
மெய்ஞ்ஞான மார்க்கத்துக் காகப்பாத் திரமா-உம்மை

வெல்லோமோ
கல்லோமோ
சொல்லோமோ
இல்லோமோ

கல்வி
கவி
புத்தி
நல்ல

(வித்தை) 3
 
கொஞ்சம்நீர் கோபம் செய்யில்,அஞ் சிடுவோம்-எங்கள்
குற்றம் பொறுக்கச் சொல்லிக்கெஞ் சிடுவோம்
தஞ்சம தாக உமைநம் பிடுவோம்-உம்மேல்
சாகித்தியம் செய்து தினம்கும் பிடுவோம்-நாங்கள்

தாழ்ந்தோமே
ஆழ்ந்தோமே
சூழ்ந்தோமே
வீழ்ந்தோமே

துயர்
உம்மைச்
காலில் 
நல்ல

(வித்தை) 4