பக்கம் எண் :

10சமுதாய வீதி

அறை வாசலில் எதிர்த்த அறையைப் பூட்டிக்கொண்டு வெளியே
புறப்படத் தயாராகும் ஓர் அழகிய யுவதியின் பின்புறத் தோற்றம்
முத்துக்குமரனின் கண்களை வசீகரித்தது. அந்த இடையின் பொன் நிறம்,
முதுகின் வாளிப்பு, நீலப்புடவை எல்லாம் அழகுச் சூறையாயிருந்தன.
 
     ‘‘மேகம் மருங்கணிந்து
          மின்னல் வரக்கண்டேன்
     யோகம் உருக்கனிந்து
          யுவதி வரக் கண்டேன்’’

-என்று பாட்டுக் கட்டவேண்டும் போலிருந்தது. நெடில் எதுகையில்
யோகம் மேகம் ஆகிய சொற்களுக்குப்பின் என்ன வார்த்தைகள் இருக்கின்றன
என்பதை அவன் கண்கள் புத்தகத்தில் துழாவின. நாடகக் கம்பெனியின்
தேவைக்கு எந்த நிலையிலும் எந்த அவசரத்திலும் பாட்டு எழுதிப் பாட்டு
எழுதி-எதற்கெடுத்தாலும் எதுகை நிகண்டைப் பார்க்கிற பழக்கம் வந்திருந்தது
அவனுக்கு. எதுகைகள் கிடைத்தன. பாகம், வேகம், தோகை என்று
முன்சொற்களுக்குப் பொருத்தமான எதுகைகள் கிடைத்தும் பாட்டை மேலே
எழுதுவதில் மனம் செல்லவில்லை. தன் வாழ்க்கை நிலையும், தான்
பட்டினத்திற்குப் பிழைப்புத் தேடி வந்திருக்கிற அவலமும் நடுவே நினைவு
வரவே, பாட்டு எழுதுவதற்குரிய நிலைமைக்காக மனம் எவ்வளவு உயரம்
மேலே போகவேண்டுமோ அவ்வளவு உயரம் மேலே போக மறுத்தது.
ஆகவே பாட்டில் ஈடுபாடு குன்றியது.

     அந்தப் பொன் மின்னும் இடையின் ஒருவரிச் சதை, வாளிப்பான
முதுகு, கழுத்துக்குக் கீழே அரை வட்டமாகத் தெரிந்த பொற்குவடுகளின்
செழிப்பு, எல்லாம் அவன் மனதுக்கு உணவாயிருந்தன. இடையே இன்னொரு
சிந்தனைக்கும் அவன் மனம் தாவியது. மதுரையிலோ திண்டுக்கல்லிலோ,
இத்தனை உடற்கட்டும் வாளிப்பும் உள்ள பெண்களை அவன் அதிகம் சந்திக்க
நேர்ந்ததில்லை. அதற்கு என்ன காரணம் என்று அவன் மனம் தற்