பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி9

அந்த நம்பரை அவனுக்குத் தெரிவித்தார் ரிஸப்ஷனில் இருந்தவர்.
சென்னைக்கு வந்தவுடன் ஒவ்வொரு விநாடியும் அந்த விநாடியின்
நிலைமைக்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியிருப்பதை
அவன் உடனடியாக உணர்ந்தான். விநாடிகளைத் தனக்குத் தகுந்தாற்போல
மாற்றிக் கொள்கிற பழக்கமான வாழ்விலிருந்து விநாடிகளுக்குத்
தகுந்தாற்போலத் தானே மாறவேண்டிய வாழ்வுக்கு இறங்குவது சிறிது
சிரமமாகத்தான் இருந்தது. அவன் யாருடைய ஃபோன் நம்பரை
விசாரித்தானோ அந்தப் பெயரிலிருந்து பிறந்த மரியாதையும் பிரமிப்பும் உந்த
அவன் மேலும் சிறிது மரியாதையைச் செலுத்தினார் அந்த ரிஸப்ஷனிஸ்ட்.

     ஃபோனில் நடிகன் கோபால் கிடைக்கவில்லை. அவன் ஏதோ

     ஷூட்டிங்குக்காக பெங்களூர் போயிருக்கிறானென்றும் பிற்பகல் மூன்று
மணிக்கு விமானத்தில் திரும்புகிறான் என்றும் தெரிந்தது. இவன் பால்ய
சிநேகிதத்தை எல்லாம் எதிர்ப்புறம் கேட்டவர் காது புளிக்க விவரித்தபின்,
‘‘நாலரை மணிக்கு மேல் நேரில் வாருங்கள்! சந்திக்கலாம்’’ என்று வேண்டா
வெறுப்பாகப் பதில் தெரிவிக்கப்பட்டது. அந்த வினாடியில் உடனே அந்தப்
பதிலுக்குத் தகுந்த மாதிரி அவன் மாற வேண்டியிருந்தது. பதிலை மாற்ற
அவனால் முடியாது; எங்கும் போகவும் வழியில்லை; மழை நிற்கும் என்றும்
தோன்றவில்லை. பகல் சாப்பாட்டுக்குப் பின் நன்றாகத் தூங்க வேண்டுமென்று
தோன்றியது. இரவு இரயில் பயணத்தில் இழந்த தூக்கத்தைப் பெற வேண்டும்
போலிருந்தது அவனுக்கு. புதிய ஊரில், புதிய கட்டிடத்தில், புதிய அறையில்
உடனே தூக்கம் வருமா என்று தயக்கமாகவும் இருந்தது. பெட்டியைத் திறந்து
புத்தகங்களை வெளியே எடுத்தான்.

     இரண்டு நிகண்டு, ஓர் எதுகை யகராதி, நாலைந்து கவிதைப்புத்தகங்கள்
இவைதான் அவனுடைய தொழிலுக்கு மூலதனம். ‘க’கர எதுகை, ‘த’கர வருக்க
எதுகை, என்று பழுப்பேறிய பக்கங்கள் புரண்டன. திறந்திருந்த