பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி109

யாது. அதனாலே கவலைப்பட வேண்டியதில்லை. தன்னாலே நல்லாச் செய்ய
முடியற ஒரு காரியத்தை மட்டும் கருத்தூன்றிச் செய்துவிட்டு மற்றதை
மற்றவங்ககிட்டே விடணும்கிற பெருந்தன்மையெல்லாம் இங்கே கிடையாது.
எல்லாரும் எல்லாத்தையுமே செய்யலாம்கிற ஒரு மனப்பான்மை இங்கே உண்டு.
அந்த மனப்பான்மையை யாரும் அத்தனை சுலபமாகப் போக்கிட முடியாது...’’

     ‘‘கோபால் எப்படி இதிலே?’’

     ‘‘நீங்க கேட்கிறதினாலே இப்ப நான் உபசாரப் புகழ்ச்சி செய்யக்
கூடாது...’’

     ‘‘உள்ளதைச் சொல்லேன்.’’

     ‘‘ஃபீல்டுக்கு வந்தப்ப ஸின்ஸியரா உழைச்சாருங்கறாங்க...இப்ப அவரும்
எல்லாரையும் போலத்தான் ஆயிட்டாரு...’’

     ‘‘கலையிலே ஆத்ம வேதனைப் படணும்...’’

     ‘‘அப்படீன்னா?’’

     அசல் சிரத்தை வேணும்னு சொல்றேன்...’’

     ‘‘ரொம்பப் பேரு இங்கே உடம்பு வேதனைப்பட்டே உழைக்கிறதில்லே.
நீங்க என்னடான்னா ஒரு படி மேலே போய் ஆத்ம வேதனைப்படணும்னே
சொல்றீங்க...’’

     ‘‘உள்ளதைச் சொல்றேன்! ஆத்ம வேதனைப்படாம என்னாலே ஒரு வரி
பாட்டு எழுத முடியலே. ஆத்ம வேதனைப்படாம என்னாலே ஒரு வரி கதை
எழுத முடியலே. ஆத்ம வேதனைப்படாம என்னாலே ஒரு வரி நல்ல வசனம்
எழுத முடியலே...’’

     ‘‘இருக்கலாம்! உங்களுக்கு உங்க கலை மேலே அத்தனை சிரத்தை
இருக்கிறதுனாலே அப்படித் தவிக்