பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி119

முகபாவங்களைக் காட்டியும், மாற்றியும் நடிப்பதற்கோ தகுதி அற்றவர்களாக
இருந்தார்கள். நாடக உப பாத்திரங்களில் நடிப்பதற்கு நாட் கூலிகளைப் போல
இப்படிப் பலர் சென்னையில் மலிந்திருக்கிறார்கள் என்பதை முத்துக்குமரனால்
புரிந்துகொள்ள முடிந்தது. அவரவர்கள் பகுதியை அங்கேயே உட்கார்ந்து பிரதி
எடுத்துக் கொள்ளுமாறு கூறித் தாளும் பென்சிலும் கொடுத்தாள் மாதவி. அதில்
சிலருக்குப் பிழை இல்லாமல் தமிழில் எழுதும் பழக்கம்கூட இல்லை என்பது
தெரிய வந்தது.

     ‘‘பாய்ஸ் கம்பெனியில்கூட வயிற்றுக்கு வறுமை உண்டு. ஆனால் கலை
வறுமையையோ தொழில் சூன்யங்களையோ அந்தக் காலத்தில் பார்க்க
முடியாது. இங்கே இருக்கிற நெலமையைப் பார்த்தால் அந்தக் காலமே
நல்லாயிருந்திருக்குன்னுதான் தோணுது...’’ என்று மாதவியைத் தனியே உள்ளே
அழைத்து ஏக்கத்தோடு அவளிடம் கூறினான் முத்துக்குமரன்.

     ‘‘என்ன செய்யிறது? இங்கே அப்பிடித்தான் இருக்கு.
கஷ்டப்படறவங்கதான் இப்படி வேலையைத் தேடி வர்ராங்க. இதைத் கலைன்னு
நெனச்சுத் தேடி வர்ரவங்களைவிட பிழைப்புன்னு நெனைச்சுத் தேடி வர்ரவங்க
தான் அதிகமா இருக்காங்க’’ என்றாள் மாதவி. ஒத்திகையின் போது அந்த
நடிகர்களிடம் இன்னொருவிதமான தொத்து நோயும் பரவி இருப்பதை
முத்துக்குமரன் கண்டான். திரைப்படத் துறையில் பிரபலமாக இருக்கிற
ஏதாவதொரு நடிகனின் குரல், பேசும் முறை, முகபாவம் அத்தனையையும்
இமிடேட் செய்வதே தொழில் இலட்சியமாகவும், திறமையாகவும் அவர்களால்
கருதப்பட்டது. கலையிலும், கலையைப் பற்றிய எதிர்கால நோக்கத்திலும்
பக்குவமடையாத தன்மைகள் அதிகமாக இருந்தன. இரண்டு மூன்று மணி
நேரம் அவர்களுக்குப் பயற்சியளிப்பதில் செலவழித்தான் அவன். ஒவ்வொரு
உப நடிகனுக்