பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி121

     ‘‘வேண்டியவங்களா இருந்திட்டாங்கன்னா - ஒரு வேலையும்
செய்யாட்டிக்கூட மாதச் சம்பளம் கொடுத்துடுவாங்க, மத்தவங்களுக்கு நாடகம்
நடக்கிற தினத்தன்னிக்கு மட்டும் சம்பளம் இருக்கும். அது பத்து
ரூபாயிலேயிருந்து ஐம்பது ரூபா வரை இருக்கும். ஆளைப் பொறுத்து,
வேஷத்தைப் பொறுத்து, பிரியத்தைப் பொறுத்து - எல்லாம்
வித்தியாசப்படும்...’’

     ‘‘நாடகங்கள் பெரும்பாலும் எப்படி நடக்கும்? யார் அடிக்கடி
கூப்பிடறாங்க? எதிலே நல்ல வசூல்?’’

     ‘‘மெட்ராசிலே சபாக்களை விட்டால் வேற வழி இல்லை. இங்கே
அநேகமா ஒவ்வொரு ஏரியாவிலேயும் ஒரு சபா இருக்கு. வெளியூர்லேயும்
பம்பாய், கல்கத்தா, டில்லியிலே நம்ம ஆளுங்களுக்கு சபாக்கள் இருக்கு.
மத்தபடி முனிசிபல் பொருட்காட்சி, மாரியம்மன் கோயில் பொருட்காட்சி. கட்சி
மாநாட்டு அரங்கம்னு விதம் விதமா - நடக்கறது உண்டு. வெளியூர் நாடகம்னா
ஸீன்களையும் ஆட்களையும் கொண்டு போய் திரும்பறதுக்குள்ள உயிர்
போயிடும்...’’

     ‘‘நடத்துகிற சபாக்கள், பொருட்காட்சிகள், அரங்கங்கள் எல்லாம்
பெருகியிருந்தாலும் - அன்னிக்கு இந்தக் கலையிலே ஈடுபடறவனுக்கு இருந்த
ஆத்ம, வேதனை இன்னிக்கி இல்லே. இன்னிக்கு வயிற்றுப் பசி மட்டுமே
இருக்கு. கலைப்பசி கொஞ்ச நஞ்சமிருந்தாலும் அதை மிஞ்சற அளவுக்கு
வயிற்றுப் பசிதான் எங்கேயும் தெரியுது.’’

     ‘‘நீங்க சொல்றது உண்மைதான்.’’ - மாதவி பெருமூச்சு விட்டாள். சிறிது
நேரத்துக்குப் பின்பு அவளே மேலும் கூறலானாள்.

     ‘‘கல்கத்தாவிலே தினசரி ரெகுலரா நாடகமே நடத்தற தியேட்டர்கள்
இருக்கு, நாடகங்களிலேயும் நீங்க சொல்ற ஆத்ம வேதனை இருக்கு. நான் ஒரு