பக்கம் எண் :

126சமுதாய வீதி

அன்றே வைத்துக் கொள்ளலாமென்று கோபால் முடிவு செய்திருந்தான். நாடக
அரங்கேற்றத்தன்றும், அதைத் தொடர்ந்து பல காட்சிகளுக்கும் - ஹவுஸ்ஃபுல்
ஆவதற்கேற்றபடி அத்தனை சிறப்பாக எல்லோரும் பத்திரிக்கைகளில் புகழ்ந்து
எழுதி விடுவதற்கான சூழ்நிலையையும் கோபாலே உருவாக்கி இருந்தான்.
அதோடு இந்த நாடகத்தை அரங்கேற்றுவதில் வேறு ஒரு திட்டமும்
கோபாலின் மனத்தில் இருந்தது. மலாயாவிலுள்ள பினாங்கிலிருந்து அப்துல்லா
என்கிற பணக்கார இரசிகர் ஒருவர் சென்னைக்கு வந்திருந்தார்.
மலாயாவிலிருக்கும் பிரபல வியாபாரிகளில் ஒருவரான அப்துல்லா இந்திய
நாடகக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளை - மலாயாவில் ‘காண்ட்ராக்ட்’
எடுத்து ஊர் ஊராக ஏற்பாடு செய்யும் பொறுப்பை நடத்துவதில்
சாமர்த்தியசாலி. கோபால் நாடக மன்றத்தின் முதல் நாடகமான
‘கழைக்கூத்தியின் காதலை’ மந்திரி தலைமை வகித்து அரங்கேற்றும் முதல்
தினமே பினாங்கு அப்துல்லாவும் அதைப் பார்ப்பதாக இருந்தது. பார்த்தபின்
கோபாலையும், நாடகக் குழுவினரையும் மலாயா, சிங்கப்பூரில் - நாடகங்கள்
நடத்த ஒரு மாதச் சுற்றுப்பயணத்திற்கு ‘காண்ட்ராக்ட்’ பேசி அப்துல்லா
அழைப்பாரென்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அப்துல்லா உடனே ஆர்வத்தோடு
விரும்பி முன் வந்து - ‘கழைக்கூத்தியின் காதலை’ - ஒரு மாத காலம்
மலாயாவில் நடத்துவதற்கு உடன்பட வேண்டுமென்று கோபாலைக் கேட்கத்
தூண்டுகிற அளவிற்கு முதல் நாள் நாடகமே அமைய வேண்டுமென்று
விரும்பினார்கள் குழுவினர்.

     அந்த நாடகத்திற்காக நாடகம் வெற்றி பெறாமல் - வேறு பல
காரணங்களுக்காக நாடகம் வெற்றி பெற வேண்டுமென்று கோபால்
முனைந்திருப்பதை முத்துக்குமரன் அவ்வளவாக விரும்பவில்லை.
அரங்கேற்றத்திற்கு முந்திய தினம் ‘ஜில் ஜில்’ முத்துக்குமரனைப் பேட்டி காண
வேறு வந்து விட்டான். அந்தப் பேட்டி