பக்கம் எண் :

130சமுதாய வீதி

மிருக்கு. ஆனா அது என்னன்னு மட்டும் ஞாபகம் இல்லே.’’

     ‘‘சார்! சார் இப்படிப் பதில் சொன்னா எப்படி சார்? எல்லாப் பதிலுமே
ஒரு மாதிரியாகத் தெரியுதுங்களே! படிக்கிறவங்களுக்கு நல்லாயிருக்க
வேண்டாமா?’’

     ‘‘நிச்சயமா இந்த மாதிரிப் பதில்கள் புதுமையாகத் தான் இருக்க முடியும்
மிஸ்டர் ஜில் ஜில்! ஏன்னா இதுவரைக்கும் எல்லாப் பேட்டிகளிலேயும்
வாசகருங்க ஒரே தினுசான பதிலைப் படிச்சுப் படிச்சி அலுத்துப்
போயிருப்பாங்க (சிறிது தணிந்த குரலில்) பதிலு - கேள்வி எல்லாமே இதுவரை
நீரு எழுதினதுதானே?’’

     ‘‘வாஸ்தவம்தாங்க...’’

     சிறிது நேரம் ஏதோ எழுதிக் கொண்டபின் ஜில் ஜில் தன்னுடைய
அடுத்த கேள்வியைக் கேட்டான்.

     ‘‘உங்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடித்தமான வசனகர்த்தா யாரு?’’

     ‘‘நான் தான்...’’

     அப்படிச் சொல்லிட்டா எப்படி? கொஞ்சம் பணிவா இருந்தா நல்லது...’’

     ‘‘எனக்கே என்னைப் பிடிக்கலேன்னா? அப்புறம் வேறே யாருக்குப்
பிடிக்கப் போகுது?’’

     ‘‘சரி, போகட்டும்! இப்ப அடுத்த கேள்வியைக் கேட்கிறேன். கலை
உலகில் உங்கள் இலட்சியம் என்ன என்பதைக்கூற முன் வருவீர்களா?’’

     ‘‘இலட்சியம் என்ற வார்த்தை ரொம்பப் பெரிசு! அதை நீங்க
சுலபமாகவும், துணிச்சலாகவும் உபயோகப் படுத்துகிறதைப் பார்த்து எனக்குப்
பயமாயிருக்கு மிஸ்டர் ஜில் ஜில்! இந்த வார்த்தையை உச்சரிப்பதற்கு
யோக்கியதை உள்ளவர்கள்கூட இன்றைக்கு இந்தக் கலையுலகில் இருப்பார்களா
என்பது சந்தேகமே...’’