பக்கம் எண் :

132சமுதாய வீதி

     ‘‘கோபிச்சுக்காதிங்க சார்...’’

     ‘‘சே! சே! இதெல்லாம் ஒரு கோபமா? நான் நிசமாகவே கோபிச்சுக்கிட்டா
நீரு கிடுகிடுத்துப் போயிடுவீரு...’’

     ‘‘பெரிய மனசு பண்ணிக் கோபமில்லாமே அடுத்த கேள்விக்குப் பதில்
சொல்லுங்க. உங்க எதிர்காலத்திட்டம் என்ன?’’

     ‘‘அது என் எதிர்காலத்துக்குத்தான் தெரியும், எனக்குத் தெரியாது...’’

     ‘‘ரொம்ப ஹாஷ்யமாப் பேசறீங்க சார்!’’

     ‘‘ஹாஷ்யமில்லே...ஹாஸ்யம்...’’

     ‘‘ஹாஷ்யம்னுதான் சொன்னேன்...’’

     முத்துக்குமரன் மாதவியின் பக்கமாகத் திரும்பிப் புன்னகை புரிந்தான்.
ஜில்ஜில் குனிந்து ஏதோ எழுதத் தொடங்கினான்.

     ‘‘ஒரு நிமிஷம் இப்படி உள்ளே வாங்களேன்’’ என்று அவனை
அவுட்ஹவுஸ் வராந்தாவிலிருந்து உள்பக்கமாகக் கூப்பிட்டாள் மாதவி. அவன்
அவளைப் பின் தொடர்ந்தான்.

     ‘‘அது ஏன் அந்த ஆளுகிட்டப் போயி அப்படிச் சொன்னீங்க?’’

     ‘‘எப்படிச் சொன்னேன்?’’

     ‘‘இவளைப்போல ஒரு தென்றல் வீசினால் கலியாணங் கட்டிப்பேன்...னு
சொன்னீங்களே?’’

     ‘‘ஏன் இவளையே கட்டிப்பேன்னு உறுதியா அடிச்சிச்
சொல்லியிருக்கணும்கிறியா? அப்படிச் சொல்லாதது என் தப்புத்தான் மாதவி.’’

     ‘‘நான் அதைச் சொல்லலே -’’

     ‘‘பின்னே எதைச் சொல்றே?’’

     ‘‘மாதவியைப் போல் மங்கை நல்லாள் கிடைத்தால்