| முத்துக்குமரன், மாதவி, வேறு சில நண்பர்கள் ஆகியவர்களோடு கலந்து பேசினான் கோபால். ‘‘சினிமாவை மூணு மூணரை மணிநேரம் உட்கார்ந்து பார்க்கிறவங்க - சுலை குன்றாத நல்ல நாடகத்தை மூன்று மணி நேரம் நல்லாப் பார்க்கலாம். எந்தக் காட்சியையும் குறைக்கப்படாது. நாடகம் இப்படியே இருக்கட்டும். ஏதாவது கைவச்சா இப்ப இதிலே இருக்கிற உருக்கமும் கட்டுக்கோப்பும் கெட்டுப்போயிடும்’’ - என்று முத்துக்குமரன் அடித்துச் சொல்லி விடவே கோபால் பேசாமல் இருக்க வேண்டியதாயிற்று. மறுநாள் மாலையில் மந்திரி தலைமையில் நாடக அரங்கேற்றம். ஆகையினால் அன்றிரவு எல்லாருமே நன்கு உறங்கி ஓய்வு கொள்ள வேண்டியிருந்தது. அடுத்த நாள் மாலை ஐந்து மணிக்கே எல்லாரும் அண்ணாமலை மன்றத்தில் இருக்க வேண்டும். ஆறு மணிக்கு நாடக ஆரம்பம். கடைசிக் காட்சிக்கு முன்பாக மந்திரி தலைமை வகித்து நாடகத்தைப் பாராட்டிப் பேசுவதாக ஏற்பாடு. எல்லா நிகழ்ச்சிகளும் சேர்ந்து நாடகம் முடிய இரவு பத்து மணி ஆகிவிடும் என்று தெரிந்தது. நாடகத்தைக் காணப் பிரமுகர்களும், வேறு நாடகக் குழுவினரும், பினாங்கு அப்துல்லாவும் சிறப்பாக அழைக்கப்பட்டிருந்தார்கள். அதனால் ஸ்டேஜ் ரிஹர்சல் முடிந்த இரவிலோ அடுத்த நாள் காலையிலோ ஒருவருக்கும் நாடகத்தின் நேர அளவைக் குறைப்பது பற்றியோ, வேறு திருத்தங்கள் செய்வது பற்றியோ - யோசிக்கவோ நேரம் இல்லை. ஸ்டேஜ் ரிஹர்ஸலைப் பார்த்தவர்களில் ஜில்ஜில் மட்டும் போகும் போது எல்லாரிடமும், ‘‘நாடகத்தில் ஹாஷ்யம் குறைவு...கொஞ்சம் கூட இருந்தால் நல்லது’’ - என்றான். ‘‘ஹாஸ்யம் போதுமானது இருக்கு? ஹாஷ்யம்தான் இல்லே. பேசாமல் போயிட்டு வாரும்’’ - என்று முத்துக் |