பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி145

துக்குள்ளார நீயே அழைச்சிட்டுப் போயிட்டு வந்துடணும். நாள் ரொம்பக்
குறைச்சலாயிருக்கு,’’

     ‘‘எங்கே? நம்ப பாண்டிபஜார் ஸன்லைட் ஸ்டூடியோவுக்கே அழைச்சிட்டுப்
போகட்டுமா?’’

     ‘‘ஆமாம். அங்கேயே அழைச்சிட்டுப்போ. அவன் தான் சீக்கிரம்
எடுத்துக் கொடுப்பான்...’’

     உரையாடல் மாதவிக்கும் கோபாலுக்கும் இடையே தொடர்ந்ததே ஒழிய
முத்துக்குமரன் அதில் கலந்து கொள்ளவே இல்லை.

     சிறிது நேரத்திற்குப் பின் கோபால் அங்கிருந்து புறப்பட்டபோது,
வாசற்படி வரை போய்த் திரும்பி, ‘‘மாதவீ! இதோ ஒரு நிமிஷம்...’’-என்று
கண்ணடிப்பது போல் ஒரு கண்ணைச் சிறக்கணித்து அவளைக் கூப்பிட்டான்
கோபால். அவன் அப்படி மாதவியைக் கண்ணடித்துக் கூப்பிட்டதை
முத்துக்குமரன் மிகவும் அருவருப்போடு கவனித்தான். அவனுள்ளம் குமுறியது.
மாதவியும் போவதா, வேண்டாமா என்று தயங்கியவளாக முத்துக்குமரன்
பக்கமும் கோபால் பக்கமுமாக மாறி மாறிப் பார்த்தாள். அதற்குள் மறுபடியும்
கோபால் தெளிவாக அவளை இரைந்து பெயர் சொல்லியே கூப்பிட்டு
விட்டான். போவதைத் தவிர வேறு வழி அவளுக்குத் தோன்றவே இல்லை.
அவள் வெறுப்பு உமிழும் முத்துக்குமரனின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கப்
பயந்தபடியே அறை வாசலில் நின்ற கோபாலைப் பார்த்து வரச் சென்றாள்.
கோபாலோ அவளை அங்கேயே நிறுத்திப் பேசி அனுப்பாமல் கூடவே
அழைத்துக் கொண்டு பங்களா முகப்புவரை வந்து விட்டான். அவளுக்கோ
உள்ளூற ஒரே பதற்றம்.

     கோபால் கண்ணசைத்துக் கூப்பிட்டதும், தான் அவனோடு கூடவே
புறப்பட்டு பங்களா வரை வந்து விட்டதும் முத்துக்குமரனின் மனதில்
என்னென்ன எண்