| ‘‘நீ நாடகத்துக்குக் கதாநாயகி, நீ போகாட்டி நாடகமே நடக்காது. அதனாலே நீ போய்த்தான் ஆகணும்.’’ ‘‘கதாநாயகரே வராட்டாக் கதாநாயகி போய் என்ன பிரயோசனம்?’’ ‘‘கோபால்தான் வர்ரானே.’’ ‘‘நான் கோபாலைப் பத்திப் பேசலை, இப்ப என்னோட கதாநாயகரைப் பத்திப் பேசறேன். ‘‘அது யாரு?’’ ‘‘தெரிஞ்சு உணர்ந்து வேணும்னே கேட்கறீங்க இதை, அப்பிடித்தானே?’’ ‘‘அவள் தன்னையே ஆத்மார்ததமான கதாநாயகனாக வரித்துப் பேசும் அந்தப் பேச்சைக் கேட்டு உள்ளம் பூரித்துப் பேசத் தோன்றாமல் மௌனமாயிருந்தான் அவன். அதன்பின் சிறிது நேரத்தில் அவள் கூப்பிட்டதற்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் அவளோடு போட்டோ ஸ்டூடியோவிற்குச் சென்றான் அவன். போட்டோ ஸ்டூடியோவில் பாஸ்போர்ட்டுக்காக படம் எடுத்து முடிந்ததும், அவள் விரும்பியபடியே அவளும் அவனும் சேர்ந்து ஒரு படம் எடுத்துக் கொண்டார்கள். மாலையில் அப்துல்லாவை அழைத்துவர ஓஷியானிக் ஹோட்டலுக்குப் புறப்பட்டபோது அவன் மனநிலையை அறிந்து அவள் - தனியே செல்லவில்லை. காரில் அவனையும் உடனழைத்துக் கொண்டே புறப்பட்டாள். அவனும் அவளும் புறப்பட்ட கார் பங்களா காம்பவுண்டைத் தாண்டி வெளியேறுவதற்குள்ளேயே கோபால் இன்னொரு காரில் எதிரே வந்து விட்டான். அவள் அப்போதுதான் அப்துல்லாவை அழைத்துவரப் போகிறாள் என்று புரிந்து கொண்ட கோபமும், தான் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி தனியே போகாமல் |