பக்கம் எண் :

164சமுதாய வீதி

     ‘‘நீங்க தப்பா நினைச்சுக்கலியே? அவரு அவ்வளவு மன்றாடினப்புறம்
எப்படி நான் மாட்டேங்கறது?’’

     ‘‘ஆமாம்! முதல்லே கிடைச்சதைவிட நல்ல துணை அப்புறம்
கிடைச்சிட்டா - அதை விட்டுடலாமா?’’ - என்று அழுத்தமான குரலில்
எதிர்ப்புறமிருந்து பதில் கூறினான் முத்துக்குமரன். குரலில் உள் அடங்கிய
சினம் ஒலித்தது.

     ‘‘நீங்க சொல்றது புரியலே. நீங்களும் கோபமாகவே பேசறீங்கன்னு
மட்டும் தெரியுது.

     ‘‘அப்படித்தான் வச்சுக்கயேன்’’ - என்று கடுமையாகவே பதில்
சொல்லிவிட்டு ரிஸீவரை ஓசை எழும்படி அழுத்தி வைத்தான் முத்துக்குமரன்.
மாதவிக்கு நெஞ்சில் ஓங்கி அறைந்தது போலிருந்தது. நடை பிணமாக அவள்
சோர்ந்து போய் ஃபோனை வைக்கவும் தோன்றாமல் நின்றாள். பின்பு
ஃபோனை வைத்துவிட்டு படுக்கையில் போய் விழுந்து குமுறிக் குமுறி
அழுதாள். தன்னுடைய போதாத காலம்தான் முத்துக்குமரனும் தன்னைத்
தவறாகப் புரிந்து கொள்ளச் செய்கிறது என்று தோன்றியது அவளுக்கு.
முத்துக்குமரனிடம் போய் அழுது கெஞ்சி அவனைத் துணையாகக்
கூப்பிட்டுவிட்டுப் பாதி வழியில், கோபாலோடு காரில் ஏறி வந்தது அவன்
மனத்தை வேதனைப்படுத்தியிருக்கும் என்பது அவளுக்குப் புரியத்தான்
செய்தது.

                               13

     அன்றிரவு அவள் உறங்கவே இல்லை. கண்ணீரால் தலையணை
நனைந்தது. ‘என்னை வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்க ஒரு துணை
வேண்டும்’ - என்று முத்துக்குமரனைக் கூப்பிட்டுவிட்டு அவன் நடந்தே உடன்
புறப்பட்டு வந்தபின் கோபாலுடன் காரில் கிளம்புகிற அளவு