பக்கம் எண் :

184சமுதாய வீதி

பிடிப்பது நியாயமானதுதானே?’’ என்று புன்முறுவலோடு மறுமொழி கூறினான்
முத்துக்குமரன். புடைவை எடுத்துக் கொண்டிருந்தவள் அவன் முகத்தை உற்றுப்
பார்த்துக் கொண்டே சொன்னாள்;

     ‘‘இந்தக் குறும்புதானே வேண்டாம்னு சொன்னேன்.’’

     ‘‘புடைவையைப் பத்தி ஆம்பிளைகிட்டக் கேட்டா என்ன தெரியும்?’’

     சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பல கட்டுக்களை விரித்தும்,
உலைத்தும் பார்த்தபின் - பன்னிரண்டு புடைவைகளைத் தேர்ந்தெடுத்தாள்
மாதவி.

     ‘‘நீங்க ஏதாவது பட்டுவேஷ்டி எடுத்துக்கிறீங்களா?’’

     ‘‘வேண்டாம்.’’

     ‘‘சரிகைக்கரை போட்ட வேஷ்டி உங்களுக்கு ரொம்ப எடுப்பா
இருக்குங்க...’‘ இது கடைக்காரர். முத்துக்குமரன் மறுத்துவிட்டான்.
கடையிலிருந்து அவர்கள் திரும்பும்போது பகல் இரண்டு மணிக்கு மேல்
ஆகிவிட்டது. அவர்கள் பங்களாவுக்குத் திரும்பியபோது கோபாலின்
காரியதரிசி ரீஜனல் பாஸ்போர்ட் ஆபீஸிலிருந்து பாஸ்போர்ட்களை வாங்கிக்
கொண்டு வந்திருந்தார். சிறிது நேரத்தில் பாஸ்போர்ட்கள் அவரவர்கள்
கைவசம் ஒப்படைக்கப்பட்டன. கப்பலில் முன்கூட்டியே புறப்படுகிறவர்கள்
பிரயாணத்துக்காகத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஸீன்கள், நாடகப்
பொருள்கள், ஸெட்டிங்குகள் எல்லாம் கப்பலில் கொண்டு போவதற்குரிய
முறையில் கட்டப்பட்டன.

     நடிகர் சங்கம் ஒரு வழியனுப்பு உபசார விருந்துக்கு எற்பாடு
செய்திருந்தது. கோபால் குழுவினர் மலேயா செல்வதை முன்னிட்டு
நடைபெறுவதாக விளம்பரப் படுத்தப்பட்டிருந்த அந்த விழாவில் கப்பலில்
போகும்