பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி185

கலைஞர்களுடன் கோபால், மாதவி, முத்துக்குமரன் அனைவருமே கலந்து
கொண்டனர். சங்கத்தின் தலைவர், கோபால் குழுவினர் - தங்கள் கலைப்
பயணத்தை வெற்றி கரமாக நடத்திக்கொண்டு வரவேண்டுமென்று வாழ்த்துக்
கூறினார்.

     நாள் நெருங்க நெருங்கத் தெரிந்தவர்கள் வீட்டில் விருந்து, வழியனுப்பு
உபசாரம் என்று தடபுடல்கள் அதிகமாயின. சிலவற்றில் முத்துக்குமரன்
கலந்துகொள்ளவில்லை, ஒருநாள் மாலை மாதவியே அவனை ஒரு விருந்துக்கு
வற்புறுத்தினாள். தனக்கு மிகவும் சிநேகிதமான ஒரு நடிகை கொடுக்கிற
வழியனுப்பு உபசாரம் விருந்து அது என்று அவள் எவ்வளவோ எடுத்துச்
சொல்லியும் அவன் போகவில்லை. விமானத்தில் பயணம் புறப்பட வேண்டிய
தினத்திற்கு முந்திய நாள் இரவு - முத்துக்குமரனையும், கோபாலையும் தன்
வீட்டிற்குச் சாப்பிடக் கூப்பிட்டிருந்தாள் மாதவி.

     முத்துக்குமரன் விருந்துண்ண இருந்த தினத்தன்று மாலையிலேயே
மாதவியின் வீட்டுக்கு வந்துவிட்டான். மாலையில் காபி சிற்றுண்டி கூட
அங்கேதான் சாப்பிட்டான். அவளும் அவனும் அன்று மிகப் பிரியமாக
உரையாடிக் கொண்டிருந்தாள். இடையிடையே சிறு சிறு நட்சத்திரங்களோடு
கூடிய கறுப்பு நிறப் பட்டுப்புடவையை அன்று அவள் அணிந்திருந்தாள்.
அவளுடைய மேனியின் பொன் நிறத்தை அந்தப் புடவை நன்கு எடுத்துக்
காட்டியது. பேசிக் கொண்டிருக்கும்போதே அவளுடைய கோலத்தைப் புகழ்ந்து
அவன் ஒரு கவிதை வரி கூறினான்:
 

     ‘‘இருளைப் புனைந்துடுத்தி
          இளமின்னல் நடந்துவரும்-’’

     அந்தக் கவிதை வரி அவளை மிக மிக மகிழச் செய்தது. ‘‘ரொம்ப
அழகாகப் பாடி என்னைப் பிரமாதமாய்ப்