பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி203

     ‘‘இந்த நிமிஷமே செத்துப் போயிடணும் போலிருக்கு. ஏன்னா நீங்க
இந்த விநாடி எம்மேல ரொம்பப் பிரியமாயிருக்கீங்க. அடுத்த விநாடி உங்க
கோபத்தைத் தூண்டறாப்பல ஏதாவது நடக்கறதுக்குள்ளே நான் போயிட்டா
நல்லது...’’

     ‘‘இந்தா...பைத்தியம் மாதிரி உளறாதே. வேறு விஷயம் பேசு. அப்துல்லா
கிட்டப் போனியே என்ன சொன்னான்? ஏதாச்சும் உளறினானா?’’

     ‘‘என்னவோ பத்து நிமிஷமா உளறிக்கிட்டிருந்தான். ‘ஐயம் எ மேன்
ஆஃப் ஃபேஷன்ஸ் அண்ட் ஃபேன்ஸீஸ்’ - னான்.

     ‘‘அப்பிடீன்னா என்ன அர்த்தம்?’’

     அவள் அர்த்தத்தைச் சொன்னாள். அவன் பேசுவதை நிறுத்திவிட்டு
ஏதோ யோசனையிலாழ்ந்தான். விமானம் ஈப்போவில் இறங்கியது. அங்கு
மாலை போட ஆட்கள் வந்திருந்தார்கள். ஆனால் கோபால் மட்டுமே
அப்துல்லாவோடு இறங்கிப் போனான். மாதவி தலையை வலிப்பதாகச்
சொல்லித் தப்பித்துக்கொள்ள முயன்றாள்.

                                16

     ஈப்போ விமானநிலையத்தில் அப்துல்லாவோடு முன்னால் இறங்கிப்
போன கோபால் மறுபடி திரும்பி வந்து மாதவியையும் கூப்பிட்டான்.

     ‘‘மாதவி! நீயும் ஒரு நிமிஷம் வந்து தலையைக் காட்டிப்பிட்டுப் போயிடு.
இந்தக் காலத்திலே ஆம்பிளைங்க மட்டும் போனா எந்த ரசிகன் மதிக்கத்
தயாராயிருக்கான்?’’ உங்க குழுவிலே நடிகைகள் யாருமே வரலியா’ன்னு
கேட்கிறாங்க,’’