பக்கம் எண் :

206சமுதாய வீதி

அனுப்புவார்கள்’’ - என்றார் அப்துல்லா.

     ‘‘அந்தப் பாக்கியத்தைத் தயவு செய்து எங்களுக்கும்
அளிக்கலாமல்லவா?’‘- என்று அவரைக் கெஞ்சத் தொடங்கினான் கோபால்.
மாதவியும் முத்துக்குமரனும் ஒன்றும் பேசாமல் இருந்து விடவே, ‘‘நீங்க மட்டும்
தானே சொல்றீங்க மிஸ்டர் கோபால், மாதவி ஒண்ணுமே சொல்ல வில்லையே?
இந்த ப்ராவின்ஸ் வெல்லெஸ்லியிலேருந்து என் கையாலே காக்டெயில் கலந்து
குடிக்கணும்னு தினம் எத்தினியோ கோடீசுவரன் இங்கே தேடி வந்திட்டுப்
போறான். மாதவியம்மா மட்டும் வாயைத்திறக்கவே மாட்டேங்கிறாங்க...’’

     ‘‘அவளுக்குப் பழக்கமில்லே. வாத்யாரு வேணா ஒருகை பாப்பாரு’’ -
என்று முத்துக்குமரன் பக்கமாகப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினான் கோபால்.
ஆனால் அப்துல்லா சிறிதும் அயராமல் மீண்டும் மாதவியைப் பற்றியே
பேசலானார்.

     ‘‘அதெப்படி இத்தினி காலமா மாதவியம்மா சினிமாத் துயைிலேயே
இருந்திருக்காங்க...இன்னும் இந்தப் பழக்கம் இல்லேங்கிறது வேடிக்கையாவில்ல
இருக்கு?’’

     மாதவி இதற்கு மறுமொழி எதுவும் கூறவில்லை. அப்துல்லாவின்
வேலையாள் டேபிளில் காக்டெய்ல் மிக்ஸ் பண்ணுவதற்காக பலவகை மதுப்
பாட்டில்களையும் கோப்பைகளையும் கொண்டு வந்து வைத்தான். பளீரென்று
பல வண்ணங்களில், பல வடிவங்களில் மின்னும் அந் கிளாஸ்களையும்,
கோப்பைகளையுமே கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருந்தது. பொன்நிறக்
கோடுகளால் சித்திர வேலைப்பாடுகள் செய்திருந்த அந்தக் கோப்பைகளையும்,
அவற்றின் நளினத்தையும், அழகையுமே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்
கொண்டிருந்தான் முத்துக்குமரன்.