பக்கம் எண் :

208சமுதாய வீதி

வைத்தே பேசினான் அப்துல்லா. மாதவியோ இன்னொருத்தர் முகத்தைப்
பார்த்து ஒரு சிரிப்புச் சிரிக்க வேண்டுமென்றால் கூட இப்போதெல்லாம்
அதற்கு அனுமதி கேட்பது போல் முதலில் முத்துக்குமரனின் முகத்தைத்
தயக்கத்தோடு ஏறிட்டுப் பார்க்கிறாள் என்பதைக் கவனித்து வைத்திருந்தான்
கோபால். சூழ்நிலை இப்படியெல்லாம் திரும்பும் என்பதை அவன்
எதிர்பார்க்கவில்லை, எதிர்பார்த்திருந்தால் முத்துக்குமரனை அவன் இந்தப்
பயணத்திற்குக் கூப்பிடாமலே தவிர்த்திருக்க முடியும். முன்பே திட்டமிட்டு
அப்படிச் செய்யாதது தன் தவறுதான் என்று இப்போது அவனுக்குத்
தோன்றியது.

     ‘காக்டெய்ல்’ மிக்ஸ் செய்து டிரேயில் நான்கு அழகிய கிளாஸ்களில்
எடுத்துக்கொண்டு திரும்பிய அப்துல்லா அங்கே கோபாலைத் தவிர வேறு
யாரையுமே காணாமல் திகைத்தார்.

     ‘‘அவுங்க எங்கே? நாலு பேருக்குக் கலந்திட்டேனே?’’

     ‘‘தெரியலே? கீழே இறங்கிப் போனாங்க. உலாவப் போயிருப்பாங்கன்னு
நினைக்கிறேன்...’’

     ‘‘இருக்கச் சொல்லி நீங்களே வற்புறுத்திச் சொல்லியிருக்கலாமே மிஸ்டர்
கோபால்...? அந்த வசனக்காரன்...அதான் ஒரு திமிரு பிடிச்ச ஆளு - அவளை
விடாமல் சுத்திக்கிட்டிருக்கானே; அவனுக்கு ஒரு கிளாஸைக் கொடுத்து ரெண்டு
மடங்கு உள்ளே தள்ளச்சொன்னா அப்புறம் அவளும் தானா வழிக்கு
வருவா...’’

     கோபால் இதற்கு மறுமொழி கூறவில்லை. அப்துல்லாவே மீண்டும்
கூறலானார்:

     ‘‘இந்த மாதிரி ‘டிரிப்’லே இப்படி ஆட்கள் இருந்தாங்கன்னா ‘டிரிப்பே’
குட்டிச் சுவராயிடுமே; ‘கம்பெனி’க்கு ஒத்துப்போற ஆளா இருக்கணும்.
முரண்டும் திமிரும்