பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி209

பிடிச்ச ஆளா இருந்தா பிரயாணமே குட்டிச் சுவராயிடும்...’’

     ‘‘என்ன செய்யிறது? பூனையை மடியிலே கட்டிக்கிட்டுச் சகுனம்
பாத்தாப்பில அந்த ஆளையும் கூட்டிக்கிட்டு வந்தாச்சு. கூட்டிக்கிட்டு வந்த
பாவத்துக்கு அனுபவிக்கிறதை அனுபவிச்சுத்தான் ஆகணும்.’’

     இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்து ‘காக்டெயிலில்’ முழுகினர்.

     ‘பேச்சு வேறு திசைக்குத் திரும்பியது. பினாங்கு நகரத்தின் அழகையும்,
சுத்தத்தையும் பற்றித் தன் வியப்பை அப்துல்லாவிடம் வெளியிட்டான்
கோபால்.

     ‘‘சும்மாவா? வெள்ளைக்காரன் இந்த ஊரைப் பிரமாதப்படுத்தி ‘ஜார்ஜ்
டவுன்’னு கொண்டாடியிருக்கானே?’’

     ‘‘நம்ப தமிழ் ஆளுங்களுக்கு அடுத்தபடியா இந்த ஊர்லே எந்த ஜனங்க
அதிகமா இருக்காங்க?’’

     ‘‘சைனீஸ்தான்’’ ஸென் யீன்னு நம்ம ஃபிரண்டு ஒருத்தர் இருக்காரு.
அவர் வீட்டுக்கு நாளை லஞ்சுக்குப் போறோம். பெரிய டிம்பர் மெர்ச்சண்டு
அவர். ஹாங்காங்ல கூட பிஸினஸ் இருக்கு அவருக்கு, பழகறதுக்குத்
தங்கமானவரு.’’

     ‘‘நம்ம நாடகங்களுக்குத் தமிழ் ஆளுங்க மட்டும்தான் வருவாங்களா?
அல்லது சைனீசும், மலாய்க்காரங்களும் கூட வர்ரது உண்டா?’’

     ‘‘வர்ரது உண்டுதான்! இங்கே பொதுவா எல்லாருமே வருவாங்க. ஆனா
நாடகத்துக்குத் தமிழாளுங்களைத் தான் அதிகமா எதிர்பார்க்கலாம். நாட்டியம்,
ஓரியண்டல் டான்ஸ், அது இதுன்னா கொஞ்சம் அதிகமாகவே சைனீஸ்,
மலாய்க்காரங்களை எதிர்பார்க்கலாம். உங்களுக்குச் சினிமா புகழ்
இருக்கிறதினாலே வசூல் நல்லா ஆகும்.