பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி213

வேணும்னா உங்ககிட்டக் கேட்டு அவசியம் வாங்கிக்கறேன்’ - என்று
கத்தரித்தாற் போல அவருக்கு மறுமொழி கூறினாள் அவள். அவர் தன்னைப்
பார்க்கிற பார்வையும் பேசுகிற பேச்சும் பிடிக்காமல் - அவள் விரைவில்
தப்பித்துக் கொண்டு அறைக்குப் போய்த் தூங்க விரும்பினாள். அப்துல்லாவோ
அவளைக் கெஞ்சாத குறையாக வேண்டினார்: ‘‘கொஞ்சம் உட்கார்ந்து பேசிக்
கொண்டிருக்கலாமே மிஸ் மாதவி! அதற்குள் தூக்கம் வந்து விட்டதா என்ன?’’

     ‘‘காலையில் பேசிக் கொள்ளலாம் சார், குட்நைட். வருகிறேன்’’ - என்று
அறைக்குள் போய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டுதான் நிம்மதியாக
மூச்சுவிட்டாள் மாதவி.

     காலையில் விடிந்ததும் ‘பிரேக் ஃபாஸ்டை’ முடித்துக் கொண்டு அவர்கள்
யாவருமே பினாங்கு ஹில்லில் இருந்து கீழே இறங்கி விட்டார்கள். ஊரிலிருந்து
கப்பல் மூலம் புறப்பட்டிருந்த மற்ற நடிகர்களும், ஸீன்கள் முதலிய நாடகப்
பொருள்களும் அன்று கப்பலில் வருவதால் அவர்களையும், பொருள்களையும்
கரை சேர்த்து அழைத்து வரச் செல்ல வேண்டியிருந்தது. பினாங்கு ஹில்லில்
இருந்து திரும்பும்போதும், அதன் பின்னும் அப்துல்லா - முத்துக்குமரனிடம்
மிகமிக அலட்சியமாக நடந்து கொள்ளத் தொடங்கியிருந்தார். என்ன
காரணமென்று சொல்லாமலே முத்துகுமரனிடம் அவர் வெறுப்பைக் காட்டத்
தலைப்பட்டார். கோபால் அப்துல்லாவைப் பகைத்துக் கொள்ளப் பயந்து
அதைக் கண்டு கொள்ளாதவன் போல் இருந்துவிட்டான். மாதவிக்குத்தான் மிக
மிக வேதனையாகவும் தர்மசங்கடமாகவும் இருந்தது. முத்துக்குமரன் மேல்
அப்துல்லாவுக்கு அலட்சியமும் வெறுப்பும் அதிகமா

     ச - 14